திருச்சியில் தொடரும் ஸ்பா ரெய்டு.. போலீஸ் தேடும் முஸ்தபா,அம்மு

0
1 full

திருச்சியில் தொடரும் ஸ்பா ரெய்டு.. போலீஸ் தேடும் முஸ்தபா,அம்மு

திருச்சியில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலை பிடிக்க மாநகர கமிஷனர் லோகநாதன்  உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று 27/01/2021 திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில், கண்டோன்மென்ட் ராஜா காலனி பகுதியில் இயங்கி வந்த ரோஸ் பெட்டல் ஸ்பா, பொன்னகரில் இயங்கி வந்த மேக்ஸ் ஸ்பா,  தில்லை நகர் 5வது பிரதான சாலையில் இயங்கி வந்த மேக்ஸ் ஆயுர்வேதிக் சென்டர், ஆகியவற்றில் மேற்கொண்ட சோதனையில் பெண்களை  வேலைக்கு  அமர்த்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

2 full

இதில், பாதிக்கப்பட்ட 7 பெண்களை போலீசார் மீட்டனர்.  பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பெண், 3 ஆண்கள் என 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.  மேலும், தலைமறைவாக உள்ள மஜாஜ் சென்டரை நடத்திய முக்கிய குற்றவாளி முஸ்தபா, மற்றும் மசாஜ் சென்டர்களை வாடகைக்கு விட்ட 2 உரிமையாளர்கள் , ஏற்கனவே, மேற்கொண்ட சோதனையில் முக்கிய குற்றவாளியாகிய அம்மு ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாநகரில் இதுவரை 10 போலி மஜாஜ் சென்டர்கள் மீது  மாநகராட்சியும், மாநகர காவல்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது கட்டிடங்களை வாடகைக்கு விட்ட உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சிகுள்ளாகியுள்ளது.

 

http://திருச்சி ரவுடி பேபியை தொடர்ந்து அடுத்தது சிக்க போகும் அம்மு ?? https://angusam.com/ammu-who-will-get-stuck-next-after-trichy-rowdy-baby/

http://ஸ்பா ரவுடி பேபி சூர்யா சொல்லும் அந்த நபர் யார் ?https://angusam.com/who-is-the-person-who-says-spa-rowdy-baby-surya/

3 half

Leave A Reply

Your email address will not be published.