திருச்சியில் கொரோனாவிற்கு பின் இயல்புக்கு திரும்பிய பல்நோக்கு சிகிச்சை மையம்

0

திருச்சியில் கொரோனாவிற்கு பின் இயல்புக்கு திரும்பிய பல்நோக்கு சிகிச்சை மையம்

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் 6 மாடிகளை கொண்ட பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், விபத்து, அவசர சிகிச்சைப்பிரிவு, இருதயவியல், குழந்தை மருத்துவம், குழந்தை அறுவை சிகிச்சை, உளவியல், கதிரியக்கவியல், புற்றுநோய் சிகிச்சை என பல்வேறு துறைகள் செயல்பட்டு வந்தது.

சந்தா 2

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கரோனா தொற்றின் காரணமாக, பல்நோக்கு மருத்துவமனை வளாகம், முற்றிலுமாக கரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டது. இவ்வளாகத்தில், கொரோனா தொற்றாளர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது.

‌சந்தா 1

தற்போது, கரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளதால், 10 மாதங்களுக்கு பின் நேற்று (27/01/2020)  பல்நோக்கு மருத்துவமனை வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, வழக்கம் போல் சிகிச்சைக்காக நோயாளிகள், பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.