டாம்கோ கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:

டாம்கோ கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு:
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு 2020-21-ம் ஆண்டிற்காக சிறுபான்மையினர் நல மக்கள்
பயனடையும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ.4.55 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டாம்கோ கடனுதவி திட்டத்தின் கீழ் கடனுதவி பெற நகர்ப்புறம் கிராமப்புறங்களில்
விண்ணப்பிக்கும் நபர்களுக்கு டாம்கோ கடன் திட்டம் -2ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6,00,000/-லிருந்து ரூ.8,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் மேற்படி கடன் திட்டங்களுக்கு
விண்ணப்பிக்க சாதிசான்று,ஆதார் அட்டை, வருமான சான்று, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம்/ திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமா்பிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு.இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
