பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு தேர்தல் , ஏயூடி வெற்றி !

1
full

பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு தேர்தல் , ஏயூடி வெற்றி !

ukr

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் (23.01.2021) அன்று நடைபெற்ற, ஆட்சிக்குழு உறுப்பினர் தேர்தலில் (AUT) பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்ந்த பேராசிரியர் சுகுணலெட்சுமி வெற்றிபெற்றார்.

உறுப்பினருக்கான தேர்தலில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT) சார்பில் போட்டியிட்ட, திருச்சி சீதாலெட்சுமி இராமசாமி பெண்கள் கல்லூரியின் வணிகவியல் இணைப்பேராசிரியர் முனைவர் P.சுகுணலெட்சுமி அவர்கள் வெற்றி பெற்றார். வெற்றிச் சான்றிதழை பல்கலைக்கழகப் பதிவாளர் கோபிநாத், முனைவர் P.சுகுணலெட்சுமிக்கு வழங்கினார்.
வெற்றிபெற்ற சுகுணலெட்சுமி அவர்களுக்கு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் காந்திராஜ், பொதுச்செயலர் கிருஷ்ணராஜ், பொருளாளர் சேவியர் செல்வக்குமார், திருச்சி மண்டல AUT தலைவர் முனைவர் லீமாரோஸ், மண்டலச் செயலர் பேராசிரியர் சார்லஸ், முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் முனைவர் சொக்கலிங்கம், தூய வளனார் கல்லூரி AUT கிளை பொறுப்பாளர் முனைவர் ஜெயபால் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

half 1
1 Comment
  1. Nedunchezhian T says

    நன்றி

Leave A Reply

Your email address will not be published.