“மனிதம் மறத்துப்போகவில்லை”- ஸ்ரீ பவுண்டேசன் நிறுவனருடன் ஒரு நேர்காணல்

0
full

வீதியோரம் ஆதரவற்ற நிலையில், கடுங்குளிரிலும் காற்றிலும் தனிமை உணர்வுடன் அழுக்கடைந்த கிழிந்த உடையுடன், வெளிறிய பார்வையுடன், தானாக பேசிக்கொண்டோ, திட்டிக்கொண்டோ இருக்கும் நபர்களை நாம் பலமுறை கடந்து சென்றிருப்போம். அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஸ்ரீ பவுண்டேசன் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீகிருஷ்ணனுடன் நமது ஆசிரியர் வெற்றிச்செல்வன்.

உங்களது பூர்வீகம்?

ஸ்ரீரங்கம்.

poster

பெற்றோர் பற்றி?

அப்பா – ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். அம்மா இல்லத்தரசி. நாங்கள் 3 பேர்.  எனக்கு தங்கை, தம்பி உண்டு. இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

என்ன படித்துள்ளீர்கள்?

ஐடிஐ மோட்டார் மெக்கானிக்.

திருமணம் ஆகிவிட்டதா? எத்தனை குழந்தைகள்

ஆம். 2 பெண் குழந்தைகள். பெரியவர் எம்சிஏ, சிறியவள் பள்ளிப்படிப்பில் இருக்கிறாள்.

ஆனாலும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள்?

ஒரு புன்முறுவல்

இந்த மாதிரி ஒரு அமைப்பை எப்போது ஆரம்பித்தீர்கள்? என்ன நோக்கில் ஐயா?

முதலில் சாலையில் சுற்றித்திரியும் சாலையோர விலங்கினங்களை பராமரிக்க ஒரு இடத்தை சங்கரமடத்திடம் கேட்டு வாங்கி அவற்றை பராமரித்து வந்தோம். பின்னர் அவர்கள் அதனை கோசாலையாக மாற்றினர். முதலில் 2013-ம் ஆண்டு ஆரம்பித்தேன்.

கசங்கிய, கந்தல் ஆடைகளுடன், கண்களில் வெளிறிய பார்வையுடன், தங்கள் நிலையை தாங்களே உணராத நிலையில் இருக்கக்கூடிய மக்களுக்கு மறுவாழ்வு தருகிறீர்கள்? இந்த எண்ணம் எப்படி வந்தது? ஸ்ரீ பவுண்டேசன் ட்ரஸ்ட் எப்போது ஆரம்பிக்கப்பட்டது.

என்னை பொறுத்த வரை யாசகர்கள் இல்லா திருச்சி, ஆதரவற்றவர்கள், அனாதைகள் இல்லாத திருச்சியை உருவாக்க வேண்டும் என்பது எனது தாரக மந்திரம். அதன் அடிப்படையில் தான் 2015-ல்  ஸ்ரீ பவுண்டேசன் ட்ரஸ்ட் ஆரம்பிக்கப்பட்டது

ஒரு ஆதரவற்றோரை மீட்க செல்கையில் உங்களின் அனுபவங்கள்?

பொதுமக்கள், போலீசார் எங்களுக்கு போனிலோ, அல்லது நேரிலோ தகவல் கொடுக்கின்றனர். நாங்கள் உடனே அங்கு சென்று அவர்களுடன் சென்று பேச்சுவார்த்தை நடத்துவோம். சிலர் எங்களை தாக்குவதுடன்,  கல் வீசி எறிவர், காதில் கேட்க இயலாத வார்த்தைகளால் திட்டுவர். ,

ஏன் அவ்வாறு நடந்து கொள்கிறார்?

மன அழுத்தம். கடன் சுமை, உறவினர்களின் இறப்பு, ஆதரவற்ற சூழ்நிலை. இவைகளே ஒரு மனிதன் உயர் மன அழுத்தத்திற்கு ஆளாகி தன்னிலை மறந்து பைத்தியக்காரன் போல தோன்ற வைக்கிறது. அவர்களிடம் ஆதரவாக பேசினாலே போதும்.  அவர் மனநிலையில் இருந்து அவரிடம் பேச வேண்டும். அவர் உங்களை மனைவியாக நினைத்தால் அதுமாதிரி பேசணும் அதுமாதிரி. நண்பனாக நினைத்தால் அதுமாதிரி இப்படி.

உதாரணத்திற்கு, ஒருவர். அவரது வயது 35. உற்றார், உறவினர் இருக்கிறார்கள். பெற்றோர் இல்லை. அங்காளி, பங்காளிகள் என்னை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் விரட்டிவிடுவர் என்ற மனநிலையில் இருந்தார். அவரிடம் அவரது உறவினர்கள் போல் பேசி, அவரது மனதை மாற்றினோம்.

சலீம் என்பவர் பழூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். அவர் தனக்கு அரசாங்கம் தூக்குத்தண்டனை கொடுத்துவிட்டது, ஏன் எனில் நான் சரியாக பல் தேய்க்கவில்லை.  அதனால்தான் என்றார். உடனே அவரிடம் நெருங்கி பேசி அவரை குளிக்க வைத்து புத்தாடை அணிவித்தபின்னும்,  என்னை அவர் தூக்கு தண்டனை நிறைவேற்றும் அதிகாரியாக நினைத்துக்கொண்டார். அவரை மனநல ஆஸ்பத்திரியில் காண்பித்து அவரை சரி செய்த பின், அவருக்கு ஒரு பேப்பரில் உங்கள் தண்டனையை நான் நிறைவேற்றவில்லை. ரத்து செய்கிறேன் என்று நான் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தவுடன் அவர் அதிலிருந்து மீண்டு விட்டார்.

எப்படி சார் இவ்வளவு எளிதில் தூக்கு தண்டனையை ரத்து செய்துவிட்டீர்கள்?

சிரிக்கிறார்.

வாழ்வாதாரத்திற்கு என்ன செய்கிறீர்கள்?

தன்னார்வலர்கள் எங்களுக்கு உதவி செய்கிறார்கள். நாங்கள் சம்பளமாக எடுத்துக்கொள்கிறோம்.

நாங்கள் கால் செய்யலாமா?

ukr

9944006688 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அது என்னுடைய நம்பர்தான்.  (ஸ்ரீ பவுண்டேசன் கிருஷ்ண ஐயர்)

இப்போது கால் வந்து விட்டது? அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?

உடனடியாக எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த இடத்திற்கு அருகில் உள்ளவர்கள் யாராவது ஒருவர் வந்துவிடுவோம். அருகில் உள்ள காவல்துறையின் உதவியுடன் அவர்களை மீட்டெடுப்போம்.

அவர்கள் மாறி மாறி பேசுவர். கொஞ்சநேரம் பேசியபின் அவர்களை எங்களது ஆட்களுடன், இல்லையெனில் பக்கத்தில் இருப்பவர்கள் உதவியுடன் அவர்களை எங்கள் இடத்திற்கு அழைத்து வந்து விடுவோம்.

காவல்துறையிடம் புகார் மனு கொடுத்துவிட்டு, அதில் பாதிக்கப்பட்டவர் எந்த இடத்தில் இருந்து மீட்டெடுத்துள்ளோம். அவர் ஆணா, பெண்ணா, எந்த நிலையில் உள்ளார். எந்த தேதி. எந்த காவல்நிலையம், என்று காவல் ஆய்வாளர் அவர்களிடம் தெரிவித்தபின், அதனுடைய கடித மாடல்

அனுப்புநர்-நிர்வாக இயக்குனர்-ஸ்ரீபவுண்டேசன்.

பெறுநர்- காவல் ஆய்வாளருக்கு, எங்கள் அமைப்பின் மூலமாக காவல்துறை உதவியுடன் ஒருவரை மீட்டு அரசுஅங்கீகாரம் பெற்ற கருணை இல்லத்தில் ஒப்படைக்கிறோம். என்று மனு கொடுப்போம்.

அதனை பெற்றுக்கொண்ட காவல்த்துறையினர் எங்களுக்கு, மனு ரசீது தருவார்கள். பின்னர் அவர்களை குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து ஒரு வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்வோம்.

அவர்கள் பார்க்கவே அருவருக்கத் தக்கவர்களாக இருப்பர்களே எப்படி?

ஆம். அவர்கள் உடல் மீது துர்நாற்றம் கூட வீசும். அவர்கள் மனநிலையில் சகித்துக்கொள்வோம். கடந்த 1 வருடமாக 23 பேரை மீட்டுள்ளோம்..

மனநலம் பாதித்தவர்களை வகைப்படுத்த முடியுமா?

ஆம். எம்.ஐ., எம்ஆர்

அப்படி என்றால்?

எம்.ஐ – மெண்டலி இல், தற்காலிகமாக மன அழுத்தம் உள்ளவர்கள். மீண்டும் அவர்களை மீட்டு கொண்டு வர முடியும். உரிய மருத்துவ சிகிச்சை கொடுத்து 100 சதவீதம் சரி செய்து விடலாம்

எம்.ஆர் – மெண்டலி ரிட்டர்ன் பிறப்பிலேயே இருப்பார்கள். இவர்களை மீட்க முடியாது. இறக்கும் வரை அப்படித்தான் இருப்பார்கள்.

அழுகிற நிலையில், இருப்பார்கள், வயிறு பெரிதாக இருக்கும் அவர்களை என்ன செய்வீர்கள்?

தன்னை யார் என்று அவர்கள் மறந்து விட்டார்கள். திட்டுவார்கள். கெட்ட வார்த்தைகளால்.

மீட்டபின் என்ன செய்வீர்கள்?

மீட்டபின், போலீசார் சிஎஸ்ஆர் கொடுத்தபின் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்வோம். அங்கு மனோதத்துவ டாக்டர்கள் அவர்களிடம் பேசுவார்கள். எம்.ஐ, எம்.ஆர் என சர்டிபிகேட் தருவர். மனநல காப்பகத்தில் ஒப்படைப்போம்.

உதாரணமாக இறுதியாக மீட்ட அகிலா. இவர் உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்தவர். 30 வயது இருக்கும். ரோட்டில் சுற்றிக்கொண்டிருந்தார்.   மீட்டோம். 3 நாள் சிகிச்சை செய்த பின் அவர் அண்ணன் நம்பர் ஞாபகம் வர அதனை சொன்னார். அவர் அண்ணன் வந்த பின். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், குழந்தைகள் கடத்தல் தடுப்பு நல அதிகாரியுடன், கலெக்டர் கையெழுத்து போட்டுத்தர நாங்கள் அவர்களது குடும்பத்துடன் சேர்த்துவிட்டோம்.

கர்ப்பிணி பெண்களாக இருந்தால்?

அப்படி எனில் போலீசார் உதவியுடன் தான் மீட்கிறோம். சிஎஸ்ஆர். போட்டு காவல்துறை உதவியுடன் மீட்டு, பின்னர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபின் அவர்கள் சர்டிபிகேட் கொடுப்பர். பின்னர் அவர்களுக்கான சிகிச்சையும் அவர்கள் தருவர்.

இப்பணி சவாலானதா?

இல்லை சார். மனநிறைவு. சக மனிதனாக, அவர்களை நம் குடும்பத்தில் ஒருவராக நினைத்துக்கொள்வேன்.  சமூகத்திற்கு நமக்கு ஏன் என்று கடந்து செல்லாமல் அவர்களை நம் குடும்பத்தில் ஒருவராக நினைத்து எங்களுக்கு கால் செய்யுங்கள் அல்லது காவல்நிலையத்தில் புகார் செய்யுங்கள்.

ஒரு மனிதநேய பண்பாளரை சந்தித்த மனநிறைவுடன், ­­­­ என்ற எண்ணத்துடன் அவரிடமிருந்து விடைபெறுகிறோம்.

வெற்றிச்செல்வன்

 

half 1

Leave A Reply

Your email address will not be published.