நீதிமன்றங்களுக்குள்ளான கிரிக்கெட் போட்டி- திருச்சி நீதிமன்றம் முதலிடம்.

0
full

8 மாவட்ட நீதிமன்றங்களுக்குள்ளான கிரிக்கெட் போட்டி- திருச்சி நீதிமன்றம் முதலிடம்..

திருச்சியில் நேற்று 24/01/2021 ராக்ஃபோர்ட் ராக்கர்ஸ் நீதித்துறை கிரிக்கெட் பிரீமியர் லீக் நடத்திய நீதித்துறை ஊழியர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் திருச்சி தஞ்சாவூர், திருவாரூர், கரூர், திருப்பூர், மதுரை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்கள் பங்குபெற்றனர்.

poster

ukr

முதல் சுற்றில் திருச்சி அணியினர் புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும்  அணியினரை தோற்கடித்து முன்னிலைக்கு வந்தனர்.

இறுதியாக தஞ்சாவூர் அணியிடம் போட்டியிட்ட திருச்சி அணியினர் முதல் பேட்டிங் தேர்ந்தெடுத்து 51 ரன்களை எடுத்து இலக்கு வைத்தனர் பின்னர் இறங்கிய தஞ்சாவூர் அணியினர் அவர்களும் 51 ரன் குவித்து சரிசமம் செய்தனர். அதன் மூலம் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டு முதலில் பேட்டிங் செய்த தஞ்சை அணியினர் ஒரு ஓவருக்கு 5 ரன்களை எடுத்தனர். அதனை திருச்சி அணியினர் முறியடித்து அபார வெற்றி கண்டனர்.

நீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீதிமன் ற ஊழியர்களுக்கு இடையே நடைபெற்று முடிந்த கிரிக்கெட் போட்டியில் திருச்சி அணியினர் முதலிடத்தையும், தஞ்சாவூர் அணியினர் இரண்டாவது இடத்தையும், கரூர் அணியினர் 3-வது இடத்தையும் பிடித்து நீதிமன்றங்களுக்கு பெருமையை பெற்று தந்துள்ளனர்.

ஜெ.கே..

half 1

Leave A Reply

Your email address will not be published.