“மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா..

0
1

“மனிதி” பெண் சாதனையாளர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா..

திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.Z. ஆனி விஜயா இ.கா.ப தலைமையில் திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மினி மஹாலில் இன்று 24.01.2021 காலை 10 மணி அளவில் பல்வேறு துறைகளில் சாதித்த சிறந்த பெண் சாதனையாளர்களுக்கு *”Women Achiever s Award”* என்ற விருதை வழங்கி இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ மாணவிகளை கொண்டு யோகா, கராத்தே, சிலம்பம் மற்றும் டென்னிஸ் போன்ற போட்டிகளை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

2

அதில் காவல்துறை துணைத் தலைவர் சிறப்புரை ஆற்றிய போது ஆணுக்கு இணையான அனைத்து சாதனைகளையும் பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை மாணவர்கள் மத்தியில் எடுத்துக் கூறினார் . மேலும் பெண்களின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை எடுத்து கூறி அனைவரிடத்திலும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஆர் எஸ் கே பள்ளி தலைமை ஆசிரியர், ஸ்ரீ கிருஷ்ணா உணவக உரிமையாளர் மற்றும் மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் என சுமார் 100 நபர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

3

Leave A Reply

Your email address will not be published.