குழுமாயி அம்மன் தோற்றமும் வரலாறும்

0
full

வழிவழியாக குலவைப்பாடல்கள், கும்பிப்பாடல்கள் இவையே குழுமாயி மேல் பாடப்பட்டு வருகின்றன. அதனை வைத்தும், கல்வெட்டுக்களை வைத்தும் அம்மனின் வரலாறை இப்போது பார்ப்போம்.

பெரியகுளத்தில் அப்பு பட்டர் என்பவர் இருந்தார். அவரது நிலத்தில் பெருமழை காரணமாக வயல் மண்மேடாகி விடுகிறது. ஊமச்சி உறிஞ்சி என்ற குழுமிக்கு அருகில் மண்மேட்டை பள்ளர்கள் செப்பனிடுகையில் மண்வெட்டி பட்டு இரத்தம் பீறிட்டு வருகிறது. உடனே இச்செய்தி அப்பு பட்டருக்கு தெரிவிக்கப்படுகிறது. அன்றிரவு அவரது கனவில் தோன்றிய அம்மபாள் உனது வேலையாள் என்தோளில் வெட்டிவிட்டான். பரவாயில்லை. அதனால் என்னை எல்லோரும் கண்டு கொண்டார்கள். எனக்கு கோவில் கட்டி வழிபடு நான் உங்களை காப்பேன் என்கிறாள். குழுமிக்கருகில் பள்ளர்களால் தோண்டி எடுக்கப்பட்டதால் குழுமாயி என்று பெயர் ஏற்பட்டது.

poster

அப்பு பட்டர் கோணங்கி வைத்து கதையை தெரிந்து கொள்ள முற்பட, ”நான் உதிர வெள்ளத்தில் வந்த காளி. இங்குதான் இருப்பேன். எனக்கு மாசி 15ம் நாள் காப்புக்கட்டி திருவிழா நடத்த வேண்டும். அப்போது ஊருக்குள் எடுத்துச் சென்று ஊர் மக்களுடன் திருவிழா நடத்த வேண்டும். இறுதியில் மனிதக்காவு வேண்டும் என்றாள். மனிதக்காவு என்றவுடன் எல்லோரும் அமைதியாக இருக்க ஒருவர் மட்டும் மனிதக்காவு சாத்தியமில்லை. மாறாக ஆட்டுக்கிடாய் காவு கொடுக்கிறோம் அதனை ஏற்று எங்களைக் காப்பாற்று என்கிறார். காளி அதற்கு சம்மதித்து பார்ப்பனர் ரெங்கநாதன் பெயரால் சத்தியம் செய்து கொடுக்கும்படி கேட்கிறாள். வெள்ளாட்டில் ஊனமில்லாத கருப்புக்குட்டியை காவு கொடுத்து  சத்தியம் செய்யப்பட்டவுடன், மண் மேட்டில் புதைந்திருந்த காளி சிலையை அகழ்ந்து எடுத்தனர்.

கோரையாறு, குடமுருட்டி, உய்யகொண்டான் ஆகிய ஆறுகள் கூடுமிடத்தில் ஒரு சிறிய மண்டபம் கட்டி காளியின் சிலையை அங்க வைத்து வழிபட தொடங்கினர்.

ukr

திருவிழாவின் போது குழுமாயி எனும் தெய்வம் இறங்குவதால் அவர் மருளாளி எனப்படுகிறார்.

இவர் இடையில் சிகப்பு நிற கச்சை, இடைமணி, போர் வீரர் போல் தலையணி அணிந்து வந்து, அருள்வாக்குரைத்து குட்டிகளை பெற்றுக்கொள்கிறார். இவரை தெய்வமாகவே மக்கள் பூசிக்கின்றனர்.

கூந்தற்பனையின் நடுக்குருத்தில் குழுமாயி அம்மனின் திருவுருவம் செய்து அணிகலன்கள் அணிவித்து அதற்கு சக்திகொடுத்து காளிவிட்டத்தில் பொருத்தி ஓலைப்பிடாரியாக மக்கள் முன் காட்சிக்கு வைக்கின்றனர்.

இத்திருவிழாவில் 300 வருடங்களுக்கு முன்பு எல்லைக்கு எல்லை குட்டியை அறுத்து உடலை பள்ளர்களும், தலையை பறையர்களும் எடுத்துக்கொள்வர்.

ஒவ்வொரு எல்லையிலும் இந்த நிகழ்வு நடைபெற்று வந்துள்ளது.

half 1

Leave A Reply

Your email address will not be published.