ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா:

0
1

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் தைத் தேர் திருவிழா கடந்த  19ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவை யொட்டி தினமும் காலை, மாலை பல்வேறு வாக னங்களில் நம்பெருமாள் உத்திர வீதிகளில் வீதி உலா நடைபெற்று வருகிறது . 4 ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்தார் . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .

தைத் தேர் திருவிழாவின் 4 ம் நாளான நேற்று ( 22 ம் தேதி ) காலை இரட்டை பிரபை வாகனத்தில் நம் பெருமாள் வீதியுலா நடந்தது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் . மாலை தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது . இன்று காலை சேஷ வாகனத்திலும் மாலை ஹனுமந்த வாகனத்திலும் , 24 ம் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும் , மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார் . 25 ம் தேதி நெல் அளவு கண்டருளுகிறார் . 26 ம் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெரு மாள் வையாளி கண்டருளுகிறார் .

2

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27 ம் தேதி காலை நடைபெறுகிறது . 28ம்தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது . நிறைவு நாளான வருகிற 29 ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள் வீதிகளில் வலம் வருகிறார் . அத்துடன் விழா நிறைவு பெறுகிறது . ஏற்பாடுகளை இணை ஆணையர் அசோக்கு மார் (கூடுதல் பொறுப்பு) , உதவி ஆணையர் கந்தசாமி , அறங்காவலர்கள்  மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர் .

3

Leave A Reply

Your email address will not be published.