திருச்சியில் ஒரே நாளில்  ரூ.35 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:

0

திருச்சியில் ஒரே நாளில்  ரூ.35 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:

திருச்சி விமான நிலையத்தில்  ஒரே நாளில் ரூ . 35 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

சந்தா 2

நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளிடம்  சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த அருண்பாண்டி என்பவர்வரிடம் , ரூ . 8.01 லட்சம் மதிப்பிலான 158 கிராம் தங்கத்தையும், புதுக்கோட்டையைச் சேர்ந்த துரைசாமி என்பவர்வரிடம் ரூ .9.54 லட்சம் மதிப்பிலான 188 கிராம் தங்கத்தையும் , பெரம்பலூரை சேர்ந்த சத்யராஜ் என்பவரிடம் ரூ . 8.12 லட்சம் மதிப்பிலான 168 கிராம் தங்கத்தையும், இதேபோல் , சார்ஜாவில் இருந்து வந்த திருச்சியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் ரூ .9.41 லட்சம் மதிப்பிலான 187 கிராம் தங்கத்தையும் சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

‌சந்தா 1

இதனையடுத்து,  4 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.