திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிக்கு ரோபோடிக் இயந்திரம்:

திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிக்கு ரோபோடிக் இயந்திரம்:
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் ரூ.330 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவுகள் கொட்டப்படுவதால், பாதாள சாக்கடை அடைப்பு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால், பல இடங்களில் கழிவுநீர் கசிந்து சாலையில் ஓடுகின்றது.
இதுகுறித்து, புகாரின் பேரில், அவ்வப்போது மாநகராட்சி பணியாளர்கள் சரி செய்கின்றனர். பாதாள சாக்கடை அடைப்பை நீக்க ரூ.2.05 கோடி செலவில் 5 ரோபோடிக் இயந்திரங்கள் வாங்க மாநகராட்சியில் டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் இந்த ரோபோடிக் இயந்திரம் மூலம் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கலாம்.
