திருச்சி அருகே விவசாயி கொலை: குற்றவாளி கைது

0
full

திருச்சி அருகே விவசாயி கொலை: குற்றவாளி கைது

ukr

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் வையாபுரி, கடந்த 8ந்தேதி வையாபுரி ஊரில் இல்லாத சமயத்தில், இவருக்கு சொந்தமான நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி (52) என்பவர் முட்செடிகளை கொண்டு பாதையை அடைத்துள்ளார்.

இதனை தட்டிகேட்ட வையாபுரியின் அண்ணன் பழனியப்பன் (60) என்பரை துரைப்பாண்டி கட்டையால் தாக்கி உள்ளார். இதில், பலத்த காயமடைந்த பழனியப்பன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியப்பனை கொலை செய்த துரைபாண்டியை கைது செய்தனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.