சங்கம்பட்டி சரஸ்வதியுடன் நேர்காணல்

0
full

உங்கள் சொந்த ஊர்?

துறையூர் அருகே உள்ள சங்கம்பட்டி,

உங்கள் குடும்பத்தைப்பற்றி?

poster

பெற்றோர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.. 2 சகோதரிகள்.

என்ன படித்துள்ளீர்கள்?

நான் 8ம் வகுப்பு வரை படித்துள்ளேன். தையல் தொழில் செய்து வருகிறேன். 3 வயதில் இரண்டு கால்களும் போலியோ அட்டாக்கினால் பாதிக்கப்பட்டேன். அதனால் உள்ளூர் பள்ளியில் 8ம் வகுப்பு வரைதான் படிக்க முடிந்தது. உயர்கல்விக்கு வெளியில் செல்ல முடியவில்லை.

தையல் தொழில் செய்து கொண்டு கவிஞராக அந்த தளத்தில் வருகிறீர்கள்.?

10 வருடம் கூடை பின்னிக்கொடுத்து வந்தேன். பின்னர் என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் மற்றும் என்னை பாதித்த நிகழ்வுகளை கவிதையாக எழுதினேன். அதனை 2012 பிப்ரவரி 12 ல் ”கவியோடு வருகிறேன் என்ற கவிதை நூலாக கப்பல் கவிஞர் கிருஷ்ணமூர்த்தி ஐயா உதவியுடன் வெளியிட்டேன்.

மேலும்,நான் தையல் ஆசிரியராக 5 வருடமாக இருக்கிறேன். 110 மாணவர்களை உருவாக்கி இருக்கிறேன். துணிகள் தைத்து கொடுத்து எனது வருமானத்தை நான் ஈட்டி வருகிறேன். பிறருக்கு பயிற்சியும் கொடுக்கிறேன்.

மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன தேவையோ அதை நான் செய்து கொடுக்கிறேன். சிஎப்டியா என்ற அமைப்பில் இருக்கிறேன். ஒரு குழு வைத்து நடத்தி அதன் மூலம் அவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். எங்கள் பஞ்சாயத்தில் யூனியனில் மட்டும்.

நீங்கள் பெற்ற விருதுகள் பற்றி?

திருச்சியில் 2012 மே 14 அன்று திருச்சி கலெக்டர் எனக்கு ”சிந்தனை பேரொளி என்ற பட்டமும், 5000 பொற்கிழி கொடுத்தார்.

அதே வருடம் மகளிர் அமைப்பு கவிமகள் என்ற பட்டத்தையும், பாரதிதாசன் பல்கலைகழகம் ”தன்னம்பிக்கை சுடர் என்ற பட்டத்தையும் அளித்தனர்.

ukr

2018-19-ல் திருச்சி ஈவெரா கல்லூரியில் என்னுடைய கவிதை பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

அந்த கவிதையை சொல்கிறீர்களா?

ஒரு பெண்சிசுவின் கேள்வி என்ற தலைப்பில்,

என் கண்களை காண சூரியன் காத்திருக்க

என் புருவத்தை காண வானவில் காத்திருக்க

என் கூந்தலை காண கார்மேகம் காத்திருக்க

என் கொஞ்சும் குரலை கேட்க குயில்கள் காத்திருக்க

என் பாதச்சுவடு பதிய பூமித்தாய் காத்திருக்க

என் மூச்சுக்காற்றை சுவாசிக்க தென்றல் காத்திருக்க

என் பிஞ்சு உருவத்தை காண இவ்வுலகமே காத்திருக்க

ஏன் அம்மா என்னை காற்றில் கரைந்த கற்பூரம் போல் கருவிலேயே அழிக்க துடிக்கிறாய்.”

மிகவும் அழகான கவிதை.  நன்றி.

ஒரு மாற்றுத்திறனாளி, தன்னம்பிக்கை சுடர், கவிஞர், எழுத்தாளர், தையல்கலைஞர், சிறப்பான ஆளுமை பெற்ற பெண் ஒருவரை சந்தித்தோம் என்ற நிறைவுடன் அவரிடம் இருந்து விடைபெறுகிறோம்.

வெற்றிச்செல்வன்

 

 

half 1

Leave A Reply

Your email address will not be published.