திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு:

திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு:
ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர்

காலியிடங்கள் : 1
தொகுப்பூதியம் : ரூ.9000/-

கல்வித்தகுதி
10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சுத்
தேர்வில் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவதில் போதிய பயிற்சி
பெற்றிருக்க வேண்டும்.
ஆற்றுப்படுத்துநர் : (1 பணியிடம்)
தொகுப்பூதியம் – ரூ.14,000/-(ஒரு மாதத்திற்கு)
உளவியலாளர், சமூகப்பணி, சமூகவியல்களில், வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.
வயது – 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது (பொது விண்ணப்பதாரர்களுக்கு).
மேற்கண்ட பதவிக்கான விண்ணப்பப்படிவத்தினை https://tiruchirappalli.nic.in/என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இப்பணியிடங்களுக்கு தகுதிள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களுடன் 20.02.2021 அன்று மாலை 5.30 மணிக்குள் பதிவு அஞ்சல் மூலம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு,
No.1, மெக்டொனால்ஸ் ரோடு, கலையரங்கம் வளாகம், கண்டோன்மெண்ட், திருச்சி – 620 001.
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0431- 2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.
