எழுத்தாளர் சீத்தா வெங்கடேஷ் உடன் ஒரு நேர்காணல்

கீர்த்தனாவின் மோதிரம் சிறுகதை நூல்

0

உங்களுடைய சொந்த ஊர்?

புதுக்கோட்டை அறந்தாங்கி நிலையூர். அப்பா திருக்கோகர்ணத் சேர்ந்தவர். வேலைக்காக சென்னையில் செட்டில் ஆனோம்.  திருமணத்திற்கு பின் திருச்சியில் இருக்கிறோம்.

அப்பா என்ன பணியில் இருக்கிறார்? உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்?

‌சந்தா 1

என்பீள்டு இந்தியாவில் இருக்கிறார் அப்பா. ஒரு தம்பி, தங்கை உள்ளனர்.

என்ன படித்திருக்கிறீர்கள்?

நான் எம்.ஏ., பி.எட்., (ஆங்கிலம், ஹிந்தி இரண்டிலும்.) ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியில் இருக்கிறேன்.

தலைமையாசிரியராக இருக்கும் நீங்கள் நிறைய பணிச்சுமையை அனுபவிப்பீர்கள் இருந்தபோதும் எப்படி எழுத தோன்றியது?

ஆசிரியர் பணியில் இருக்கும் போதே எழுதவேண்டும் என்று தோன்றியது. அந்த குழந்தைகளின் பெற்றோர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், சிறுவயதிலிருந்தே எனக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. என் மனதை பாதிக்கும் எல்லா விஷயத்தையும் எழுதுவேன். யாரும் படித்துவிடக்கூடாது என்று நினைத்து அதனுடன் கற்பனை கலந்து சேர்த்து எழுதுவேன். அதுவே நான் எழுதுவதற்கு மூலகாரணமாக இருந்தது.

கணவர் மற்றும் குழந்தைகள் பற்றி?

என் கணவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  உதவி பதிவாளராக உள்ளார். பெயர் வெங்கடேஷ். எனக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

எழுத்து வடிவில் முதலில் அச்சிட்ட புத்தகம் எது?

எங்கள் குழந்தைகள் இருவருக்கும் சாதி, மதம், சடங்கு மறுப்பு திருமணம் செய்து வைத்தோம். வரும் மக்களுக்கு  தாம்பூலப்பைக்கு பதிலாக ஒரு புத்தகம் கொடுத்தோம். மகள் திருமணத்தின்போது முதலில் கொடுத்தோம்., மகன் திருமணத்தின் போது முழுமையாக அச்சிட்டு நூலாக கொடுத்தோம். என் புத்தகத்தையே கொடுத்தோம்.

கீர்த்தனாவின் மோதிரம் என்று ஏன் பெயர்?

இந்நூல் சிறுகதை தொகுப்பு. சிறுகதைகளில் உள்ள ஒரு கதையின் தலைப்பு தான் இது.

இந்நூல் நூலகத்தில் இடம்பெற்றுள்ளதா?

இனிமேல்தான் அந்தப் பணியை செய்ய வேண்டும்.

சந்தா 2

இதற்கு எவ்வளவு செலவு.ஆனது?

25 ஆயிரத்திற்கு மேல்.

உங்கள் சாதனை மற்றும் சறுக்கல்கள் என்ன?

சாதனை இன்னும் செய்யலை. இனிமேல்தான். என்னை சுற்றுயுள்ள பாதிப்பு களை மட்டுமே நான் எழுதுகி றேன். இன்னும் நான் செல்ல வேண்டியதூரம் உள்ளது. இன்னும் நான் சாதிக்கவேண்டும்.

குடும்பப்பெண், தலைமை ஆசிரியர், எழுத்தாளர் வேறு என்ன திறமைகள் உங்களுள் ஒளிந்துள்ளது?

20 வருடங்களாக தலைமையாசிரியராக இருக்கி றேன். ஓவியம் வரைவேன். கை வினைப்பொருட்கள் செய்வேன்.

எந்த வகை டிராயிங் பென்சில் டிராயிங். சித்திரக்கோடுகள் அக்ரலிக் பெயிண்டிங்  எது மேடம்?

அக்ரலிக் பெயிண்டிங், டூடுல் டிராயிங்.

அது என்ன டூடுல் டிராயிங்?

அது முறையான டிராயிங் கிடையாது. டூடுல் டிராயிங் என்றால் நினைப்பதை வரையலாம். இது கார்ட்டூன் போல. மேற்கிந்திய நாடுகளில் இது டிரெண்டிங். இதற்கு சின்ன பேனா, பென்சில் போதும். வரையலாம். முடிவில் அது ஒரு முழுமையான ஒவியமாக மாறும்.  எங்கு சென்றாலும் குப்பை இருக்கா என்று பார்ப்பேன். அதை வைத்து என்ன பொருள் செய்யலாம் என்று பார்ப்பேன்.

எதிர்கால திட்டம்?

நிறைய எழுதணும். ஊடகங்கள் பெண்களை முன்னிறுத்தி நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சொல்லிக்கொண்டு இருந்த போதும். ஊடகங்களில் காட்டாத விஷயங்களை, பெண்கள் இன்னும் அனுபவத்துத்தான் வருகின்றனர். அந்த பிரச்னைகளை மக்களுக்கு தெரிவிக்கனும். வெளியில் சொல்ல முடியாத பிரச்னைகளை தெரிவிக்கனும்.

மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நிறைய படிக்கணும் பெண்கள் நிறைய படிக்கணும்.  வேலை நிறைய இருந்தாலும், அவர்கள் கொஞ்ச நேரத்தை ஒதுக்கி நிறைய படிக்கணும். நிறைய எழுதணும். நான் எழுத்தாளர் கிடையாது.  எனக்கு ஆங்கிலமும், ஹிந்தியும்தான் நன்றாக தெரியும். தமிழில் நான் கொஞ்சம் கொஞ்சமாக எனது திறமையை வளர்த்துக்கொண்டேன். நிறைய பெண்கள் வெளியே வரணும். சாதிக்கணும்.

வெற்றிச்செல்வன்

 

 

Leave A Reply

Your email address will not be published.