திருச்சியில் மூலிகை வியாபாரம் செய்யும் அமிர்தம் உடன் ஒரு சந்திப்பு

0
full

உங்கள் சொந்த ஊர் எது?

திருவெள்ளறை எனது சொந்த ஊர். விவசாயக்குடும்பத்தில் பிறந்தேன்.

எத்தனை ஆண்டுகளாக இங்கு கடை நடத்துகிறீர்கள்? உங்களின் வயது என்ன?

poster

எனக்கு 62 வயதாகிறது. கடந்த 40 வருடங்களாக இங்க கடை வைத்துள்ளேன். காலை 6 மணியிலிருந்து மதியம் 1மணி வரை கடை போடுவேன். பின்னர் காட்டுக்கு மூலிகை பறிக்க சென்று விடுவேன்

என்ன மூலிகைகள் வைத்துள்ளீர்கள்?

மொடக்கத்தான், தைல இலை, மொசுமொசுக்க, நொச்சி இலை, குப்பைமேனி,  ஆடாதொடை, தூதுவளை, துத்தி,  துளசி, அருகம்புல், மருதாணி. ஆவராம்பூ. பொடிதளை, அவுரி, சிறியா நங்கை, பெரியாநங்கை எல்லாம் உள்ளது.

ukr

உங்களின் வாழ்வாதாரம் எப்படி?

ஐயா, பஸ் சார்ஜ் போக 200 அல்லது 300 கிடைக்கும். போதும் என்கிறார் மனநிறைவுடன்.

 

 

மூலிகை மற்றும் அதன் பயன்களை கூறுங்கள்?

சிறுநெருஞ்சி, பெருநெருஞ்சி, கூலப்பூ சிறுநீர் கல் கரைக்கும். சிறியநங்கை, பெரியநங்கை. தலைசுற்றலுக்கு நல்லது. ஆஸ்துமா மொசுக்கான், கல்யாணமுருங்கை சளிக்கு நல்லது. துளசி சாறு எடுத்து பச்சையாக குடிக்க சளி குறையும். அருகம்புல் சாறு – சர்க்கரை நோய் தீர்க்கும். மற்றும், எலும்புகளை பலப்படுத்தும்.  கீழாநெல்லி மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். டெங்கு காய்ச்சல் நோய்க்கு மலைவேம்பு கஷாயம் நல்லது. வாதமடக்கி இலை முட்டு வலிக்கு மற்றும் வாதத்திற்கு நல்லது. குப்பைமேனி இலை தோல் வியாதியை சரி செய்யும்.  துத்தி -மூல நோயை குணப்படுத்தும். தைல இலை, நொச்சி இலை தலைவலியை குணப்படுத்தும். நொனா இலை தைராய்டு பிரச்னையை தீர்க்கும். வில்வ இலை ஆடாதொடை, மொசுக்மொசுக்க இந்த மூன்று இலைகளும் ஆஸ்துமா நோயை குணப்படுத்தும்.

ஒரு வயதான மூதாட்டி தன்னம்பிக்கையுடன் காட்டிற்கு சென்று மூலிகை பறித்து வந்து தன் வாழ்வாதாரத்தையும் கவனித்துக்கொள்வதுடன், மக்களின் நோய்க்கு மருந்து தரும் ஒரு மருத்துவச்சியாக செயல்படுவதைப்பார்த்து வியந்து அவரிடம் இருந்து விடைபெறுகிறோம்.

-வெற்றிச்செல்வன்

half 1

Leave A Reply

Your email address will not be published.