வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 8½ லட்சம் பண மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 8½ லட்சம் பண மோசடி
சென்னை ஜாபர்கான் பகுதியில், விங்க்ஸ் இமிகிரேஷன் அண்ட் எஜிகேசன் என்ற பெயரில் வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் தனியார் ஏஜென்சி உள்ளது. இந்த நிறுவனத்தின் கிளை திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் இயங்கி வந்தது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் பிரகாஷ் , மற்றும் மேலாளர் வெங்கடேஷ், ஆகியோர் இணைந்து திருச்சியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரிடம் ஹாங்காங்கில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக கூறியுள்ளனர்.
அதன்படி, மணிவண்ணன் திருச்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், லட்சுமண குமார், மற்றும் யூசுப் ஆகியோரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 8 லட்சம் பணத்தை பெற்று வெங்கடேஷ், பிரகாஷ் ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், வேலையும் வாங்கி தராமல், கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக மணிவண்ணன் திருச்சி 2வது ஜீடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்டில் வழக்கு தொடர்ந்தார். பணமோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீசாரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் பிரகாஷ், வெங்கடேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
