திருச்சி டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு

0
1

திருச்சி டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு

2

திருச்சி வரகனேரி பிச்சை நகரில் உள்ள டாஸ்மாக் கடையில், ஊழியர்கள் நேற்றுமுன்தினம் வழக்கம்போல்  கடையை பூட்டி விட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் கடையை திறந்தபோது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று சோதனை செய்த போது  31,000 ஆயிரம் மதிப்பிலான  மது பாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும், டாஸ்மார்க் கடையிலும், அருகில் இருந்த பாரின் சிசிடிவி கேமராக்களை அடித்து சேதப்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுப்பட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.