திருச்சி காந்தி மார்க்கெட்டில் தீப்பற்றி எரிந்த மினிவேன்:

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தீப்பற்றி எரிந்த மினிவேன்:

திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்தவர் முகமது சலீம், இவர் நேற்று (21.01.2021) தனது மினிவேனில் காய்கறி கொள்முதல் செய்வதற்காக காந்தி மார்க்கெட் சென்ற போது என்ஜினில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வேன் தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வேனில் முன்பகுதி முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து, காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
