தட்சிணாயணம், உத்தராயணம் படிகளை கடந்து பெருமாளை சேவித்திருக்கிறீர்களா?

0
full

திருச்சி-துறையூர் சாலையில் 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கோவில்தான் திருவெள்ளறை புண்டரீ காட்ச பெருமாள் கோவில்.

108 திருப்பதிகளுள் ஒன்றான இத்தலத்தில் உய்யக்கொண்டார் எங்களாழ்வான் அவதாரம் செய்துள்ளார்.  இங்குள்ள பெருமளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும். இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுர வாயிலில் 4 படிகள் உள்ளது. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன் பின் பலிபீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை பஞ்சபூதங்களை குறிக்கிறது. பிறகு சுவாமியை தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி “தட்சிணாயணம்‘ ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும். இரண்டாவது வழி “உத்தராயணம்‘ தை முதல் ஆனி வரை திறந்திருக்கும்.

இத்தல பெருமாள் கிழக்கு பார்த்த நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவருக்கு மேல் உள்ள விமானம் விமலாக்ருத விமானம் எனப்படும். இவரை கருடன், சிபி, மார்க்கண்டேயர், பிரம்மா, சிவன் ஆகியோர் தரிசனம் செய்துள்னர்.

poster

மார்க்கண்டேய முனிவர் இங்கு தியானத்தில் இருந்த போது சிபி சக்ரவர்த்தி அங்கு வந்து ஒரு வெள்ளைப்பன்றி மக்களுக்கு பெரும் தொந்தரவு கொடுக்கிறது. அதனை தேடி வந்தேன் நீங்கள் உதவ முடியுமா என்றான். அப்போது அவர் நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய்’’ என்கிறார். அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சிகொடுக்கிறார்.

ukr

இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம்,”” நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரூபமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன்’’ என்கிறார்.

பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார் செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பிரகாரத்தில் தென்பகுதியில் கல் அறைகள் உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும்.

இறைவன் -புண்டரீகாட்சன், இறைவி-செண்பகவல்லி, தலவிருட்சம்-வில்வம், தீர்த்தம்-மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராக, கந்த, பத்ம தீர்த்தங்கள். இக்கோயில்  திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.

குழந்தைப்பேற்றிற்காக இத்தல இறைவனை வேண்டிக்கொண்டு பலிபீடத்தில் பொங்கல் படையல் செய்து பிரார்த்தனையை  பக்தர்கள் நிறைவேற்றுகிறார்கள். பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய இக்கோவில் ஒருமுறை சென்று சேவித்து வாருங்களேன்.

half 1

Leave A Reply

Your email address will not be published.