திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் வசூல் 1 கோடியை தாண்டியது:

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் வசூல் 1 கோடியை தாண்டியது:

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் (20.01.2021) நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ரூ.1 கோடியே 2 லட்சத்து, 25 ஆயிரத்து 578 ரொக்கம்,179 கிராம் தங்கம் , வெள்ளி 1 கிலோ 840 கிராம், பல்வேறு மதிப்பிலான வெளிநாட்டு பணம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர். உண்டியல் கணக்கிடும் பணியானது கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் கருட மண்டபத்தில் நடைபெற்றது. இதில், கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
