மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்க்கு மனு அளித்த விவசாயிகள்:

0

மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்க்கு மனு அளித்த விவசாயிகள்:

மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்க்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அய்யாக்கண்ணு மனு அளித்தார். மனுவில்,

food

வரலாறு காணாத  மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு , உரிய நஷ்ட ஈடு கிடைக்காமல் தவித்துக் கொண்டு மண்ணுலகில் வாழாலமா ? அல்லது விண்ணுலகத்திற்கு உங்களுடன் வந்து விடலாமா ? என்று தவித்து கொண்டிருக்கிறோம். எல்லோருக்கும் உதவி செய்வதாக அறிவிக்கின்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  மழையினால் அழிந்து விட்ட நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ .30,000 மும் , வெங்காயத்திற்கு ஏக்கருக்கு ரூ .40,000 / -மும் மற்ற பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ .20,000 / மும் வழங்க யோசிக்கிறார் . கடனை வாங்கி அண்டா குண்டாவை விற்று சாகுபடி செய்த நிலத்தின் வருமானம் இல்லாததால் விவசாயிகள் வாங்கிய  கடனை எப்படி அடைக்க முடியும் என்பதை  முதலமைச்சர் யோசிக்க மறுக்கிறார் . சீர்மரபினர் 68 சாதிகளுக்கு ஒரே DNT சான்றிதழ் வழங்க மறுக்கிறார் .

ஆகவே நாங்கள் எல்லாம் புரட்சித்தலைவர் சிலை காலில் விழுந்து வணங்குகிறோம் . தாங்கள் விண்ணுலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சருக்கு நல்ல சிந்தனையையும் , எண்ணத்தையும் , கொடுத்து விவசாயிகளுக்கு அழிந்து விட்ட பயிர்களுக்கு நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ .30,000 / மும் வெங்காயத்திற்கு ஏக்கருக்கு ரூ .40,000 / -மும் மற்ற புஞ்சை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ .20,000 / -மும் வழங்குவதுடன் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யுங்கள் என்றும் , இளைஞர்களை ஆண்மை இழக்கவும் , பெண்களை மலடாக்கவும் , கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை முதல்வர் எதிர்க்கவும் , பிரிட்டிஸ் ஆட்சியை எதிர்த்து ஆயிரக்கணக்கில் உயிர் துறந்த 68 சாதியை சேர்ந்த சீர்மரபினர்களுக்கு இரண்டு சாதி சான்றிதழ் கொடுக்காமல் DNT என்ற ஓரே சாதி சான்றிதழ் கொடுக்க உங்கள் கடைக்கண் பார்வையை முதலமைச்சர் பக்கம் திருப்புங்கள் .

உங்களுடைய காலடியில் உள்ள கோரிக்கைகளை முதல்வர் ஏற்கவில்லை என்றால் 68 சாதிகளை சேர்ந்த இரண்டு கோடி வாக்காளர்களும் , விவசாயிகள் இரண்டு கோடி பேர்களும் , புரட்சித்தலைவர் எண்ணத்தை நிறைவேற்றாதவர்களை ஆட்சியிலிருந்து இறக்க முயற்சிக்காமல் இருக்க தமிழக முதல்வருக்கு கொடுத்து நல்ல எண்ணத்தை கொடுத்து விவசாயிகளையும், DNT மக்களையும் காப்பாற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். ராஜா, சேகர், பொன்னுச்சாமி, முருகேசன், தட்சினாமூர்த்தி, சிவக்குமார் ஆகியயோர் முன்னிலை வகித்தனர். திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட் நீதிமன்ற வளாகம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மனு அளித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினரை காவல் துறையினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.