திருச்சி உய்யக்கொண்டான் பூங்கா எப்போது?

0
full

திருச்சி  உய்யக்கொண்டான் பூங்கா எப்போது?

திருச்சியில், உய்யக்கொண்டான் ஆற்றின் கரையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 18 கோடி செலவில் 3 பூங்காங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியானது 2019 ஆம் ஆண்டு தொடங்கியது.  இப்பூங்காக்கள் கண்டோன்மென்ட் ஐயப்பன் கோவில்  வண்ணாராப்பேட்டை பகுதியில் உள்ள கரைகளில் 2 பூங்காக்களும், மாவட்ட ஆட்சியரகத்தை ஒட்டிய கரையில் 1 பூங்காவும் அமைக்கப்படுகிறது. இந்த 3 பூங்காக்களுக்கும் தேசிய சின்னமான மயில், தாமரை, டைகர் (புலி) என பெயரிட்டப்பட்டுள்ளது.  இதில், டைகர் பூங்கா 5 ஆயிரத்து 948 ச.மீ. பரப்பளவிலும், மயில் பூங்கா 5 ஆயிரத்து 186 ச.மீ பரப்பளவிலும், தாமரை பூங்கா 2 ஆயிரத்து 773 ச.மீ. பரப்பளவிலும் அமைக்கப்பட்டு வருகிறது.

ukr

பூங்காக்களில் நடைப்பயிற்சி நடைபாதை, கழிப்பிடங்கள், உடற்பயிற்சி சாதனங்கள்,  போர்வெல், கண்காணிப்பு கேமராக்கள், யோகா மற்றும்  கலைநிகழ்ச்சிகள் நடந்தும் திறந்தவெளி அரங்கமும், அழகிய பூச்செடிகள், மரங்கள்  பாதுகாப்புக்காக இரும்பு கம்பிகளான தடுப்புகள்,  அமைக்கப்பட்டுள்ளன.

poster

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் கூறுகையில், கரோனா காரணமாக பூங்காங்கள் அமைக்கும் பணி தாமதாமானது.  பூங்காவின் பணிகள் 4 மாதங்களில் நிறைவு பெறும் என்றார்.

 

 

half 1

Leave A Reply

Your email address will not be published.