திருஎறும்பியூர் – தெரிந்து கொள்வோம்

0
1

திருஎறும்பியூர் ( திருவெறும்பீஸ்வரர் கோவில்) திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிவத்தலமாகும்.  நாயன்மார்களில் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற சிவாலயம்.

 சிறிய குன்றின் மீது அமைந்த இக்கோவில் முற்காலத்தில், இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங் கொண்டு வழிபட்ட னர். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில்அமைந்துள்ள ஏழாவது சிவத்தலமாகும்.

தாரகாசுரன் என்ற அரக்கனின் கொடுமைகளினால் துயருற்ற தேவர்களும் , முனிவர்களும், நாரத முனிவரிடம் ஆலோசனை கேட்க, வரக்கன் அறியாத வண்ணம் எறும்பின் வடிவம் கொண்டு இத்தலத்து ஈசனை வழிபட்டனர். மலைமீது ள்ள இக்கோயிலை அடைந்து சிவ லிங்கத்தைத் தொழ எறும்புகள் மிகவும் சிரமப்பட்டதால், ஈசன் தனது உறைவிடத்தையே ஒரு எறும்புப் புற்றாக மாற்றிக் கொண்டார். இதன் காரணமாகவே எறும்பீஸ்வரர் என அழைக்கப்படலானார்.

எறும்புகளுக்கும் அருள் ஈந்த ஈஸ்வரன் எழுந்தருளிய இடமாதலால், இத்தலம் எறும்பியூர் எனப்பட்டது.

இறைவன்- எறும்பீஸ்வரர், இறைவி-நறுங்குழல் நாயகி, தல விருட்சம்-வில்வம், தீர்த்தங்கள்- பிரம்ம தீர்த்தம், பதும தீர்த்தம், மது தீர்த்தம், குமார தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள்     

தலச் சிறப்புகள்

ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் இடையே யார் பெரியவர் என போட்டி வந்தபோது வாயுவால் பெயர்க்கப்பட்ட மேரு மலையின் ஒரு பகுதியே  இந்த மலையாக இருக்கிறது.

கருவறைக்கு பின்புறத்தில் இரண்டு காசி விஸ்வநாதர் சன்னதிகளுக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணியர் தனிச்சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே அறுகோண சக்கர வடிவம் இருக்கிறது. சுவாமியையும், இச்சக்கரத்தையும் வழிபடுபவர்களின் தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை.

2

தல விநாயகர் செல்வ விநாயகர்

முற்றிலும் கற்களால் அமைக்கப்பட்ட கருவறை. மூலவர் லிங்கம் மண்புற்று வடிவில் அமைந்துள்ளதால், நேரடியாக அபிசேகம் செய்யாமல், நீர்புகாதவாறு கவசம் பொருத்திய பின் அபிசேகம் செய்யப்படுகின்றது.

வடபுறம் சாய்வாக உள்ள ஈசன் திருமேனி (எறும்புகள் ஊற இயலும் வண்ணம்) மேற்புறம் சொரசொரப்பாக உள்ளது. சிவன்மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்கள் உள்ளன. விஷ்ணு மற்றும் பிரம்மா, இந்திரன் , அகத்தியர், நைமிச முனிவர் ஆகியோரால் வழிபடப்பெற்ற  சிறப்புடைய தலம்.. இக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில் சூரியானர் தமது இரு மனைவியரான உஷா, பிரதியூஷா உடன் காட்சி தருகிறார். திருச்சி மலைக் கோட்டையில் திரிசிரன் வழிபட்டதைப் போல, அவனது சகோதரனான கரன் இங்கு எறும்பு உருக்கொண்டு வழிபட்டான்.

பிரகாரத்தில் சொர்ணகால பைரவர் சன்னதி இருக்கிறது. மிகவும் உக்கிரமாக இருக்கும் இவரது சன்னதிக்கு நேரே கஜலட்சுமி தனிச்சன்னதியில் இருக்கிறாள். ஒரேசமயத்தில் இவ்விருவரையும் வேண்டிக்கொண்டால் பயங்கள் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் .

கருவறை முன் அமைந்துள்ள துவாரபாலகர்களில் ஒருவர் கோப முகத்துடனும், மற்றொருவர் சாந்த முகத்துடனும் இருக்கின்றனர். இக்கோயிலுக்கு வருபவர்கள் மனதில் கோபம், ஆணவம் போன்ற குணங்களைக் கொண்டிருந்தாலும் சுவாமியை வணங்கிய பின்பு அவர்கள் சாந்த கோலத்தை அடைகின்றனர் என்பதை இது காட்டுகிறது.

கருவறையை சுற்றியுள்ள பகுதியில் சிவனுக்கு பின்புறத்தில் சிவனும், மகாவிஷ்ணுவும் சேர்ந்த சங்கர நாராயணரும், ருத்ராட்ச பந்தலின் கீழ், நடராஜர் காலில் கொழுசு அணிந்த கோலத்தில் இருப்பதும் சிறப்பு.

வரலாற்றுச் சிறப்புகள்

இத்தலம் சோழ மன்னர்களின் பெரும் ஆதரவைப் பெற்று விளங்கியது. முதலாம் ஆதித்த சோழன் கண்டாராதித்தன், சுந்தரசோழன், முதலாம் இராஜராஜன் ஆகியோர் திருப்பணிகளை விளக்கும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. கி. பி. 1752ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மற்றும் ஃபிரெஞ்சுப் படையினருக்கு நடந்த போரில் இம்மலை போர் வீரர்களின் தளமாகப் பயன்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.