திருச்சி அருகே கோவில் இடிக்கப்பட்டதாக நடிகர் மீது புகார்

திருச்சி அருகே கோவிலை இடித்ததாக நடிகர் மீது புகார்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் திரைப்பட நடிகர் விமல். இவருடைய வீட்டிற்கு அருகே மந்தை என்னும் பகுதியில் அப்பகுதியினை சேர்ந்த சிலர் விளக்கு தூண் அமைத்தும், 3 அடி உயர திண்ணை சுவர் எழுப்பியும் வழிபட்டு வந்தனர். இதற்கு நடிகர் விமல் மற்றும் அவருடைய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 பேர் சேர்ந்து விளக்குதூண் மேடையை இடித்தனர். இதனையடுத்து, நடிகர் விமல், மற்றும் அவருடைய உறவினர்கள் மீது அதே பகுதியை சேர்ந்த பூசாரி செல்வம் கோவில் கட்டிடத்தை இடித்து விட்டதாக புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் மீது கோவில் இடிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
