பல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத பொதுகழிப்பறையை திறக்க பாஜக வலியுறுத்தல்:

பல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத பொதுகழிப்பறையை திறக்க பாஜக வலியுறுத்தல்:
திருச்சி மாநகர பகுதியில் கட்டிமுடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வராத பொது கழிவறைகளை திறக்க பாஜக சார்பில் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு திருச்சி மாவட்ட தலைவர் சந்திரசேகர் முதல்வர் சந்திரசேகர் முதல்வர் பழனிச்சாமிக்கு கடிதம் மூலம் மனு அனுப்பினார்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: 39வது வார்டுக்குள்பட்ட செட்டியப்பட்டியில் 2015ல் கட்டிமுடிக்கப்பட்ட பொதுகழிப்பறை 4 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. 47வது வார்டு மாணிக்கப்புரத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை ஓராண்டு ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. 40வது வார்டு சின்ன கொத்தமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவரை ஓராண்டு மேலாகியும் திறக்கப்படவில்லை. 50வது வார்டு குத்பிஷா நகரில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள கழிவரை ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. இதுதொடர்பாக முறையான நடவடிக்கை மேற்கொண்டு மக்களுக்கு பொதுகழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
