திருச்சியில் 32ம் ஆண்டு சாலை பாதுகாப்பு மாத விழா

திருச்சியில் 32ம் ஆண்டு சாலை பாதுகாப்பு மாத விழா
32ம் ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இருசக்கரவாகன ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் காவல்துறை சார்பில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் லோகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
திருச்சியில் 65 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுகின்றனர். அதனை 100 சதவீதமாக கொண்டுவர வேண்டும் என்பதற்காகவும், பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது . இந்த ஆண்டு 32வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் 18.1.2021 முதல் 17.22021 வரை ஒரு மாத காலம் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ” என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2020 ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 3 லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் வாகனஓட்டிகள் ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டி விபத்தில்லா திருச்சி மாநகரை உருவாக்க வேண்டும்.
சாலைப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனிமனிதனும் சாலை விதிகளை கடைபிடித்து , விபத்தினை தவிர்ப்பதாகும் . சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் , உறுப்பிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும் , பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன . எனவே , சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும் என்றார்
