திருச்சி எம்ஜிஆர் சிலைக்கு சுதீஷ் மாலை !

திருச்சி எம்ஜிஆர் சிலைக்கு சுதீஷ் மாலை !
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் திருச்சியில் நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளர் எல்.கே. சுதீஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதற்காக திருச்சி வந்த சுதீஷிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களிலும் வரவேற்பளித்து, அழைத்து வந்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் டி டி கணேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், தேர்தல் பிரிவு செயலாளர் கோ.தங்கமணி, மாநில மாணவரணி செயலாளர் விஜயகுமார், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அலங்கராஜ், மில்டன், ஜெயராமன், வழக்கறிஞர் பெருமாள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
