திருச்சி அதிமுகவின் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா திருவெறும்பூரில் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் !

0
1

திருச்சி அதிமுகவின் தெற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா திருவெறும்பூரில் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் !

ஜன 18 திருவெறும்பூர் அருகே உள்ள பெல் ஏடிபி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் குமார் ஆலோசனைப்படி கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

2
4

இதுபற்றிய விவரம் வருமாறு தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சித் தலைவருமான எம்ஜிஆர் அவர்களின் 104 வது பிறந்த நாள் விழா திருச்சிதெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமார் ஆலோசனைப்படி நேற்று இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இதனையடுத்து திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கணேசா பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்து பின்னர் ஏடிபி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர் நிகழ்ச்சிக்கு திருவெறும்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கும்பக்குடி கோவிந்தராஜ்,கிழக்கு ஒன்றிய செயலாளர் இராவணன்,ஆகியோர் தலைமை வகித்தனர் திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர், அரியமங்கலம் பகுதி செயலாளர் தண்டபாணி,கூத்தைப்பார் பேரூர் செயலாளர் முத்துக்குமார்,ஜெ பேரவை மாவட்ட செயலாளர் பவுனு என்கின்ற கிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீநிதி சதீஷ்குமார்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் நவல்பட்டு பால மூர்த்தி,கும்பக்குடி முருகானந்தம், தொழிலதிபர் குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சத்ரியன், வேங்கூர் ரத்தினம், தங்கமணி, சாம்பு, தேவா,ஆவின் பாஸ்கர், சூரியூர் அழகர், கவுன்சிலர் விஜிஆறுமுகம்,திருநெடுங்களம் ஒன்றியக் கவுன்சிலர் சுபத்ரா சுப்பிரமணி, வட்டச் செயலாளர்கள் முருகானந்தம் மாரிமுத்து வேல்முருகன்,புதுத்தெருசேகர் அண்ணா நகர் ராஜராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திருவெரும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் அரியமங்கலம் பொன்மலை ஆகிய பகுதிகளிலும் திருவெறும்பூர் கிழக்கு மேற்கு ஒன்றியப் பகுதிகளிலும் துவாக்குடி நகரம்கூத்தைப்பார் பேரூர் கழகம் பகுதிகளிலும் எம்ஜிஆர் படம் வைத்து மாலை அணிவித்துகட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

3

Leave A Reply

Your email address will not be published.