இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சேவை மைய மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா:

0

இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சேவைமைய மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா:

இணைந்த கரங்கள் மாற்றுத் திறனாளிகள் சேவை மையம் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சியில் நடைபெற்றது.

இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் மானாமதுரை தாலுகா சிவகங்கை மாவட்டத்தை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பதவியேற்பு விழாவில் நிறுவனர் ராதிகா மாநில தலைவர் நாகூர் மீரா உள்ளிட்டோர் தலைமை வகித்து பேசுகையில்.
அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத் திட்டங்களை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, ஒன்றியங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் மாற்றுத் திறனாளிகள் நலன் பேணும் வகையில் தொண்டாற்ற வேண்டும் என்றார். சிறப்பு விருந்தினராக அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் பேசுகையில், கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கு கட்டிட வளாகங்கள் உட்பட அனைத்து வளாகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் சென்று வருவதற்கு ஏற்றார்போல சறுக்கு வழி பாதைகளை அரசு அமைக்க வேண்டும் என்றார்.

செயல் தலைவர் திருவாசகம் இளைஞரணி தலைவர் தமிழ்ச்செல்வன் மகளிரணி தலைவர் பிச்சையம்மாள் செயலாளர் அங்கம்மாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் திருச்சிராப்பள்ளி மாவட்ட தலைவராக சிவராமகிருஷ்ணன், துணைத்தலைவராக வடிவேல், செயலாளராக பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளராக ராகவன், பொருளாளர் கீதா, துணைப் பொருளாளர் கதிரவன் உள்ளிட்டோர் பதவியேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.