திருச்சியில் தொடர் மழையால் பல ஏக்கர் பயிர்கள் சேதம்:

0
1

திருச்சியில் தொடர் மழையால் பல ஏக்கர் பயிர்கள் சேதம்:

திருச்சியில் கடந்த 5 நாட்களாக பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.

2

திருச்சியில், மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், லால்குடி, மண்ணச்சநல்லூர், அந்தநல்லூர், வாத்தலை, உப்பியலியபுரம், மணப்பாறை, புள்ளம்பாடி, பெருவளப்பூர், சிறுகளப்பூர், தெரணிபாளையம், முதுவத்தூர், எம்.கண்ணூர், முசிறி அருகே வெசந்தியலிங்கபுரம், அய்யம்பாளையம், கொடுந்துறை, உமையாள்புரம், கோட்டூர், ஆமூர், ஆகிய பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு இருந்த 95% பயிர்கள் தண்ணிரில் மூழ்கியும், முளைத்தும் நாசமாகி உள்ளது.

இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளர். தமிழக அரசு சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என பல்வேறு விவசாயிகள் கோரிக்கைகள் விடுத்துள்ளனர். வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை இணைந்து பயிர்சேதம் குறித்த கணக்கெடுப்பு முடிந்த பிறகே எந்த அளவுக்கு பயிர்சேதம் அடைந்துள்ளது என்பதை தெரியவரும்.

3

Leave A Reply

Your email address will not be published.