தி.மு.க.வுக்கு உதயநிதியால் சரிவு !

0
full

தி.மு.க.வுக்கு உதயநிதியால் சரிவு !

பா.ஜ.க வின் வேல் யாத்திரை தி.மு.க.வைக் குழப்பி விட்டதோ ?
இதற்குப் போட்டியாக உதயநிதியை களம் இறக்கியுள்ளார் ஸ்டாலின்.
தி.மு.க விடம் வேறு ஆயுதம் இல்லையோ ? திருவாரூர் போன உதயநிதி தருமபுரம் ஆதீனத்திடம் போய் ஆசீர்வாதம் பெறுகிறார். எதற்கு இந்த நாடகம் ?
ஆதீனங்களை நம்பியா தி.மு.க இருக்கிறது ? மக்கள் ஆதரவு, கூட்டணி பலம், தி.மு.க வின் மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் எல்லாம் பயனில்லையோ ?
பா.ஜ.க தான் தி.மு.க வுக்குப் போட்டி என்பதை ஸ்டாலின் ஒப்புக் கொண்டாரோ ? பா.ஜ.க வை அலட்சியப் படுத்திவிட்டு அ.தி.மு.க அரசியலை எதிர்கொள்ள தி.மு.க தயாராகட்டும்.

ukr

உதயநிதி, துரை முருகன் போன்றவர்களால் தி.மு.க வுக்கு ஒரு பயனும் கிட்டாது. மாறாக நடுநிலை வாக்காளர்கள் எரிச்சல் அடைந்து தடம் மாறிவிடுவார்கள்.
இங்கே தி.மு.க எனும் கட்சிதான் அடையாளம். அதில் உள்ள நபர்கள் அல்ல. உதயநிதி ஆதிக்கம் கட்சி செல்வாக்கைச் சீர்குலைக்கும்.
50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட ஸ்டாலின் வட இந்திய பிரசாந்த் கிஷோரிடம் உதவி கோருவது எத்தனை கேவலம் ? ஸ்டாலின் இமேஜ் அடிபட்டுப் போகாதா ? வென்றால் நீங்கள் எப்படி அதற்கு உரிமை கோர முடியும் ?
மேற்கு வங்கத்திலும் பிரசாந்த் கிஷோரால் திரிணாமுல் காங்கிரஸில் ஏகப்பட்ட குழப்பம். தெளிவான அரசியல் முடிவுகளை சொந்தமாக மேற்கொள்ள ஸ்டாலின் முன்வரட்டும்.
தேர்தல் வெற்றியை புரோக்கர்கள் மூலம் பெறமுடியாது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் இந்த முறை தில்லுமுல்லு செய்ய பா.ஜ.க திட்டமிடுகிறது.
எச்சரிக்கையுடன் இதனைத் தடுப்பது எப்படி என ஸ்டாலின் சிந்திக்கட்டும். நீதி மன்றக் கண்காணிப்பில் தேர்தல் நடக்கவும், வாக்கு எண்ணிக்கையும் நீதிபதிகள் முன்னிலையில் நடக்கவும் தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளை தி.மு.க மேற்கொள்ள முன்வரட்டும்.
தி.மு.க மீது நல்லெண்ணம் கொண்ட ஒரு பத்திரிகையாளன் பதிவு இது. வெறும் ஜால்ரா அல்ல.

poster

_ஜவஹர் ஆறுமுகம்

half 1

Leave A Reply

Your email address will not be published.