அதிகாரிகள் பார்வையிட வராததால் திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

0
full

அதிகாரிகள் பார்வையிட வராததால் திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் ஓலையூர் கிராமத்தில் மழையின் காரணமாக விளைந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததை இதுவரை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்காத காரணத்தினால் ஓலையூர்  விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

ukr

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஓலையூர் மற்றும் திருமலை சமுத்திரம் கிராமத்தில் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் வீணாகி உள்ளது. இதனை அரசு அதிகாரிகள் யாரும் பார்வையிடவில்லை எனவும் உடனடியாக அதிகாரிகள் கணக்கீடு செய்து இழப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் எனவும் ஏக்கருக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

poster

ஆர்ப்பாட்டமானது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி  துணைச்செயலாளர் அருமை ராஜ் பிரதிநிதி கார்த்தி, தினேஷ் உள்ளிட்ட 200 விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.