திருச்சியில் பல்வேறு அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா:

0
1 full

திருச்சியில் பல்வேறு அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா

திருச்சி மாவட்டம் துறையூரில் பல்வேறு அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

துறையூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் விதுன் குமார் தலைமையிலும், துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செல்வம் தலைமையிலும், உப்பிலியபுரம் முதல் நிலை பேரூராட்சியில் இளவரசி தலைமையிலும், மதுராபுரி ஊராட்சி மன்றத்தில் தலைவர் தனலட்சுமி ராமராஜ் தலைமையிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அலுவலக வாசலில் செங்கரும்பு வைத்து சூரியனுக்கு படையலிட்டு பொங்கலோ பொங்கல் என்று கூறி அரசு அலுவலர்கள் சூரியபகவானை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் மதுராபுரி ஊராட்சியில் தலைவர் தனலட்சுமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு வழங்கினார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.