தெருவோர நாட்டு நாய்களை தத்தெடுக்கும் தன்னார்வலர்கள்:

0
Business trichy

தெருவோர நாட்டு நாய்களை தத்தெடுக்கும் தன்னார்வலர்கள்:

கைவிடப்பட்ட விலங்குகளுக்கு, தெருவோர விலங்குகளுக்கு உண்ண உணவும் குடிக்க குடிநீரும் பல ஆண்டுகளாக அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சேவையாற்றி வருகிறது. தெருவோர பிராணிகளுக்கு சேவை செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் கூறுகையில்,

தெரு நாய்கள் பராமரிப்பதற்கு தத்தெடுத்தல் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றோம். அடிபட்டு, காயம்பட்டு, பராமரிப்பின்றி இருக்கும் நாய்களை மீட்டு, சிறிது காலம் தன்னார்வலர்கள் வீட்டில் வைத்து முழு உடல் ஆரோக்கியம் பெற்ற நாய்களை சமூக வலைத் தலங்கள் மூலமாகவும் தத்தெடுத்தல் மூலமாகவும் புதிய வீட்டையும் குடும்பத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்

loan point

பொதுமக்கள் வெளிநாட்டு இன நாய்கள், பூனைகள் என ஏராளமான வளர்ப்பு பிராணிகளை பிரியமுடன் வளர்க்கின்றார்கள். அதே அக்கரையினை நாட்டு நாய் இனத்திலும் அனைவரும் செலுத்தவேண்டும். நம் நாட்டு நாய் இனம் ஆதரவின்றி தெருவோரம் திரிகின்றது. தெருவோரம் வாழும் நாய்கள் இறைச்சிக்கடை முன்பும் உணவகங்கள் முன்பும் உணவிற்காக போட்டிப் போட்டுக்கொண்டு சண்டையிட்டு உணவை உண்டு வருகின்றன . இதனால் பாதசாரிகளுக்கு இடையூறும் ஏற்படுவது உண்டு பொதுவாக தெருவோர நாய்கள் உணவிற்காகவே அங்கும் இங்கும் திரிகின்றன சில நேரங்களில் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றன.

nammalvar
web designer

பலர் செல்லப் பிராணிகளாக வளர்த்த நாய்களை முதுமை காரணமாகவோ வீடு மாற்றல் காரணமாகவோ சாலையோரம் கைவிடப் படுகின்றன. கண்ணே திறக்காத நாய்க் குட்டிகளை சாலையோரம் விட்டுச் செல்கிறார்கள். இவ்வாறான நாய்க்குட்டிகள் பல வாகனங்களின் சக்கரங்களுக்கு இறையாகி விடுகின்றன.  தன்னார்வலர்கள் மற்றும் பிராணிகள் வளர்க்கக் கூடிய நபர்களைக் கொண்டு மீட்டு வருகிறோம். 

தெருவோர நாய்களை தத்து எடுத்து வளர்த்து வருபவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு. ஆர்வத்தில் சிலர் நாய்களை தத்து எடுத்து விட்டு பின்பு பராமரிக்க இயலவில்லை என கொடுக்கக் கூடிய சூழலும் ஏற்படும் அப்பொழுது அப்பிராணியை வளர்த்தெடுக்க நல்ல சூழலை உருவாக்க வேண்டியது எங்களது கடமை ஆகிறது.

தத்து எடுப்பவர்களை தயார்படுத்தவும் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அப்போது புரிந்தது. அன்று முதல் தத்தெடுக்க விரும்பும் ஒவ்வொருவரிடமும் குறைந்த நேரம் சில வீட்டு வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பு முறை குறித்து எடுத்துக் கூறுகிறோம்

விலங்குகளுக்கு தடுப்பூசி எப்போது, எங்கு போடலாம் என்ற தகவல் வரை அனைத்தையும் விளக்குகின்றோம். வெளிநாட்டு இன நாய்களுக்கு இணையாக இந்திய இன நாய்கள் தெருவோர நாய்களையும் பராமரிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கைவிடப்பட்ட விலங்குகளுக்கு உதவ பல்வேறு அமைப்புகள் தன்னார்வலர்களுடன் இணைந்து செயல்படுகிறோம் என்றார .

தெருவில் சுற்றும் விலங்குகளுக்கு கருத்தடை செய்யவும் விலங்குகள் தத்தெடுத்தலை அதிகமாக்குவதும் தெரு நாய்களை தொல்லையாக பார்க்கும் மனோபாவத்தை மாற்றி தெருவோர பிராணிகளை பாதுகாக்க வேண்டும் என்றார் அந்த வகையில் திருச்சிராப்பள்ளி புத்தூர் பிரதான சாலையில் தெருவோர நாய் குட்டி கடும் குளிரிலும் மழையிலும் இருந்ததை மீட்கப்பட்டுள்ளது. ஸ்வேதா தத்தெடுத்துள்ளார்

IAS academy

Leave A Reply

Your email address will not be published.