பன்னாரி மலை மூதாட்டியை ஸ்ரீரங்கத்தில் மீட்ட சமூக ஆர்வலர்கள்:

0
full

பன்னாரி மலை மூதாட்டியை ஸ்ரீரங்கத்தில் மீட்ட சமூக ஆர்வலர்கள்:

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அறியப்படாத பலர் ஆதரவற்று கிடைத்த உணவை உண்டு சாலையோரம் சுற்றி வருகிறார்கள்.

பலர் வயோதிக காலத்தில் வீட்டிலிருந்து வீதிக்கு வந்து விடுகிறார்கள். முதுமைக்கே உரிய தள்ளாமை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள இவர்கள் ஆதரவற்றோராக சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். நிற்க முடியாமல், உட்கார முடியாமல் மழை, வெயில், குளிர் என பல்வேறு சீதோசன நிலைகளிலும்

poster
ukr

சாலையோரங்களில் படுத்துக் கிடக்கின்றனர். இவர்களுக்கு ஏற்படும் வலியும் வேதனையும் கொடுமையானது. இவ்வாறு அவதிப்படும் முதியவர்களை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம். 

இந்நிலையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை, வினைசெய் அறக்கட்டளை இணைந்து திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் அம்மாமண்டபம் முன் உள்ள பிரதான சாலையில் அறியப்படாத மூதாட்டி கடுங்குளிரில் நிராதரவாய் உள்ளவரை அடையாளம் கண்டு பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மறுவாழ்வு அளிக்கும் வகையில் ஆதரவற்று தனித்து வாழ்ந்து வந்த நாகம்மாள் (வயது 86/2021) அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார், வினைசெய் அறக்கட்டளை கார்த்திக் உள்ளிட்டோரால் மீட்டெடுக்கப்பட்டனர். மீட்டெடுத்த நபர் தமிழ் மொழியை பேசுகிறார். மீட்டெடுக்கும் பொழுது அந்நபரிடம் எவ்வித ஆபரணங்களும், பொருளோ இல்லை ரூபாய் 600 பணம்

வைத்திருந்தார். ஆதரவற்றவரவாய் இருந்தவரை மீட்டு திருச்சி ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தியிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அந்நபருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும், விருப்பத்தின் பேரிலும் அந்நபர் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளித்து பராமரிக்க திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள கங்காரு கருணை இல்ல நிறுவனர் ராஜாவிடம் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார், வினை செய் அறக்கட்டளை நிறுவனர் கார்த்திக் காவல் நிலைய காவலர்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.