கலையிழந்த தைப்பொங்கல் ; நட்டத்தில் விவசாயிகள் !

கலையிழந்த தைப்பொங்கல் ; நட்டத்தில் விவசாயிகள் !
பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய நிகழ்வாகும். சாதி, மதம், இனம், மொழி, நிறம் என அனைத்து வேறுபாடையும் கடந்து கொண்டாடும் விழா என்பது பொங்கல் பண்டிகைக்கான தனி சிறப்பாகும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் இயற்கைக்கும், விவசாயத்திற்கு உதவிய விலங்குகளுக்கும் நன்றி கூறும் விதமாக தமிழக கிராமங்களில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவர்.

ஆனால் இந்த ஆண்டு பொங்கல் விழா தொடர் மழையின் காரணமாக களையிழந்து காணப்படுகிறது. பொங்கல் விழா கொண்ட முக்கிய காரணமாக விளங்கும் விவசாயிகள் தற்போது சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று கூறுகின்றனர் விவசாயிகள்.

இதுகுறித்து தகவல் அறிய தமிழ் நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியனை தொடர்பு கொண்டோம் ; அவர் கூறியதாவது, மத்திய அரசு வேளாண் விரோத சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. இதற்காக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம், இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வந்து கொண்டிருக்கிறது.


மேலும் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் அனைத்தும் கருகி சேதமடைந்து இருக்கின்றது. சிறிய விவசாயி முதல் பெரிய விவசாயி வரை அனைவரும் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க உள்ளனர்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், அதற்கு காரணம் தையில் அறுவடை செய்து, பாதைகளை ஏற்படுத்துவர். ஆனால் இந்த ஆண்டு அறுவடை செய்வதற்கு முன்பே நெற் பயிர்கள் தொடர் மழையால் சேதம் அடைந்திருந்தது. இதனால் விவசாயிகளின் உழைப்பு நஷ்டத்தை சந்தித்து இருக்கிறது.
-கே.ஐ
