திருச்சி மாநகர காவல்துறையினர் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட்டம் !

0
Business trichy

திருச்சி மாநகர காவல்துறையினர் பொங்கல் கொண்டாட்டம் !

தமிழரின் திருநாளாம் பொங்கல் திருநாளிலைக் கொண்டாடும் விதமாக திருச்சி மாநகர காவல் துறையினர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் மேலும் காவல் ஆணையர் பொங்கல் அடுப்பை ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

loan point

திருச்சி மாநகரத்தில் காவல் துறை சார்பாக பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று (12.01.2021) தேதி திருச்சி மாநகர ஆயுதப்படையில் பொங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

nammalvar
web designer

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கயிறு இழுத்தல், இசை நாற்காலி மற்றும் பானை உடைத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி, திருச்சி மாநகர துணை ஆணையர் குற்றம் மற்றும் போக்குவரத்து வேதரத்தினம், திருச்சி மாநகர உதவி ஆணையர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினர்கள் என் பலர் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.