திருச்சியில் ரூ.53.78 இலட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

0
Business trichy

திருச்சியில் ரூ.53.78 இலட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 330 மாற்றுத்திறனாளிக்கு ரூபாய் 53.78 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில்  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் இன்று (13/01/2021) வழங்கினார்கள்.

web designer

loan point

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 210 பார்வையற்றோர் மற்றும் காதுகேளாத வாய்பேச இயலாதோறுக்கு தலா ரூ.12,799 மதிப்பிலான கைப்பேசியும், 4 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.61,955 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 77 மாற்றுத்திறனாளிகளுக்கு 13.57 இலட்சம் மதிப்பிலான நல வாரிய நிதியுதவியும், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவியும், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 50,000 வீதம் ஆவின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய நிதியுதவியும்,1 நபருக்கு ரூ.7,900 மதிப்பிலான 3 சக்கர சைக்கிளும், தசை சிதைவு நோயால் பாதிக்கப் பட்டோருக்கான தண்ணீர் படுக்கை 2 நபர்களுக்கு தலா ரூ.1,250 மதிப்பிட்டில் என மொத்தம் 330 மாற்றுத் திறனாளிகளுக்கு 53,78,10 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள்,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின  நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்.

nammalvar

இந்நிகழ்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.இரவிச்சந்திரன் அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் வி.ஏர்போர்ட் விஜி ஆகியோர் உடனிருந்தனர். 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.