4 தாசில்தார்களுக்கு பதவி உயர்வு:

4 தாசில்தார்களுக்கு பதவி உயர்வு:

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தாசில்தார் வி.வாசுதேவன், பதவி உயர்வு பெற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தாசில்தார் சத்திய பாலகங்காதரன் சேலம் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டராகவும், ப.ரவி நாகை மாவட்ட தமிழ்நாடு வாணிப கழக மேலாளராகவும், தாசில்தார் வே.சாந்தி துணை கலெக்டராக பதவி உயர்வு பெற்று கோவை மாநகர நகர்ப்புற நிலவரி திட்ட உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரைவ தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ளார்.
