திருச்சி பெண்களை குறிவைத்து போலி தங்க நகைளுடன் உலா வரும் டுபாக்கூர் பெண்கள் !

திருச்சி பெண்களை குறிவைத்து போலி தங்க நகைளுடன் உலா வரும் டுபாக்கூர் பெண்கள் !
திருச்சி ஸ்ரீரங்கம் மாணிக்கம் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் சந்திரா. இவர் 6ம் தேதி காலை ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு பெண்கள் எங்களுக்கு அவசரமாக பணம் தேவை இருக்கிறது. ஆகையால் நாங்கள் எங்களிடம் உள்ள நகைகளை அடகு வைத்து பணம் பெறலாம் என்று வந்தோம் ஆனால் இங்கே உள்ள அடகு கடைக்காரர்கள் யாருக்கும் எங்களை தெரியாத காரணத்தினால் அடகுக்கோ அல்லது விலைக்கு யாரும் எடுத்து கொள்ள மாட்டீகிறார்கள் என்று உள்ளனர்.

பின்னர் தங்களிடம் உள்ள 10 பவுன் நகையை வைத்துக் கொண்டு சந்திராவிடம் உள்ள நகையை கேட்டுள்ளனர். 10 பவுன் நகை என்றவுடன் சந்திராவும் என்னவென்றே தெரியாமல் தான் அணிந்திருந்த 7 பவுன் நகையை கழட்டி அவர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் கொடுத்த நகையை அனைத்தையும் வீட்டிற்கு வந்து பார்த்த பின்னர் குடும்பத்தாரிடம் ஆலோசித்த போது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு நகைக்கடையில் சென்று நகையை பரிசோதித்தபோது அவை அனைத்தும் கவரிங் நகை என்று தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரா இரண்டு நாட்கள் மன உளைச்சலில் திருச்சி மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அதன்பின் கடந்த 6ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்த புகாரினை ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அதன்மூலம் புகாரை ஏற்ற போலீசார் மேற்கண்ட நபர்கள் யாரென்று அப்பகுதியில் சிசிடிவி கேமரா பதிவுகள் ஏதும் இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்

ஜெ.கே
