திருச்சியில் சுற்றுலாதளங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை

0
Business trichy

திருச்சியில் சுற்றுலாதளங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை

web designer

பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, முக்கொம்பு சுற்றுலா தளம் மற்றும் புளியஞ்சோலை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக  தடுக்கும் வகையில், மேற்கண்ட அனைத்து இடங்களிலும் 15.01.2021, 16.01.2021 மற்றும் 17.01.2021 ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

கொரோனா நோய்த் தொற்று ஏற்படா வண்ணம் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி, தமிழக அரசு எடுத்துவரும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.