பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள்:

0
Business trichy

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் தற்காலிக பஸ் நிலையங்கள்

திருச்சி மாநகரத்தில் 2021-பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இன்று  12.01.2021 முதல் 19.01.2021 வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் கீழ்கண்ட தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவுள்ளது.

தஞ்சாவூர் மார்க்கம் சோனா, மீனா தியேட்டர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகிலிருந்து இயக்கப்படவுள்ளது. புதுக்கோட்டை மற்றும்
மதுரை மார்க்கம் மன்னார்புரம் ரவுண்டானாவிலிருந்து இயக்கப்படவுள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும்.

loan point

nammalvar

மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் வழித்தடங்களில் எந்தவித மாற்றமுமின்றி வழக்கம்போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சுற்றுப்பேருந்துகள் (Circular Buses)  இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கூறியதாவது:

web designer

தேசிய நெடுஞ்சாலையில் எக்காரணத்தை கொண்டும் எவ்வித வாகனங்களையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது.

பேருந்துகளை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றவேண்டும். போக்குவரத்து சிக்னல்களில் பயணிகளை இறக்கி,ஏற்றக் கூடாது.

வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் நிறுத்தவேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களிலும்; நிறுத்தக் கூடாது.

வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும்
பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக் கூடாது.

மேற்படி விதிகளை மீறுவோர்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது பற்றிய தகவலை காவல் கட்டுப்பாட்டு அறை எண்.100-க்கும் மற்றும் மாநகர காவல் அலுவலக வாட்ஸ்ஆப் எண் 96262-73399-க்கும் தெரிவிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்படி, தற்காலிக பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படாவண்ணம் தகுந்த காவல்துறையின் பாதுகாப்பும், மாநகராட்சி மூலம் நிழற்குடை, குடிநீர், பொதுக் கழிப்பிடவசதி, ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.