தேர்வு விண்ணப்ப நகலை எரித்து கண்டன போராட்டம்.

0
1

தேர்வு விண்ணப்ப நகலை எரித்து கண்டன போராட்டம்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு காலிப் பணியிடங்களுக்காக நடைபெறக்கூடிய தேர்வுகள் தொடர்ந்து ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடைபெற்று வருகிறது.
இதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 2019 ஜூலை 14 அன்று இந்திய அஞ்சல் துறை தேர்வுகள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மட்டுமே நடைபெற்றது. அப்போது அந்த தேர்வு தமிழிலும் நடத்தப்படவேண்டும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் நடத்தப்படக் கூடாது என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் தேர்வு நடத்திக் கொள்ளலாம் எனவும் ஆனால் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என விளக்கம் கேட்டு தடை விதித்தது தடை விதித்தது.

மேலும் இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் தமிழக எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பினர். இதற்கு பதிலளித்துப் பேசிய அப்போதைய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற அஞ்சல்துறை தேர்வை ரத்து செய்து மீண்டும் அந்தந்த மாநில மொழிகளிலும் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் இனி மத்திய அரசின் சார்பாக நடைபெறக்கூடிய தேர்வுகளில் மாநில மொழிகளிலும் தேர்வு எழுதுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்வதாகவும் உறுதி அளித்தார்.

2

இத்தகைய உறுதிமொழியை காற்றில் பறக்க விட்டு விட்டு தற்போது மீண்டும் வரக்கூடிய 2021 பிப்ரவரி 14 ஆம் தேதி அஞ்சல் மற்றும் ரயில்வே அஞ்சல் சேவை துறைகளில் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக இளைஞர் உடைய வேலைவாய்ப்பைப் அழிப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியைத் திணிக்கின்ற விலையை மத்திய அரசு செய்து வருகிறது மாநிலங்களின் உரிமையை கிஞ்சிற்றும் மதிக்காமல் காலில் போட்டு மிதிக்கும் மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
2021 பிப்ரவரி 14 நடைபெற உள்ள அஞ்சல் துறை தேர்வு தமிழிலும் நடத்தப்பட வேண்டும். மத்திய அரசின் இந்தித் திணிப்பை அனுமதியோம் என திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தேர்வு விண்ணப்ப நகலை எரித்து கண்டன போராட்டம். மாநில இணைச்செயலாளர் சி.பாலசந்திரபோஸ், மாவட்ட செயலாளர் பா.லெனின், மாவட்ட தலைவர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.