திருச்சியில் நாளை (12.01.2021) காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:

திருச்சியில் நாளை (12.01.2021) காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:

ஜனவரி 2021 மாத விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (12.01.2021) செவ்வாய்கிழமை அன்று முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், நலத்திட்டங்கள் போன்ற விவசாயம் தொடா்புடைய கருத்துக்களை மட்டும் தொிவிக்கலாம். மேலும் கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் விவசாயப் பெருங்குடி மக்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவா் சு.சிவராசு, இ.ஆ.ப., தொிவித்துள்ளார்.
