ஆதரவற்ற முதியோர்கள் சமூக ஆர்வலர்களால் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

0

ஆதரவற்ற முதியோர்கள் சமூக ஆர்வலர்களால் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அறியப்படாத பலர் ஆதரவற்று கிடைத்த உணவை உண்டு சாலையோரம் சுற்றி வருகிறார்கள். பலர் வயோதிக காலத்தில் வீட்டிலிருந்து வீதிக்கு வந்துவிடுகிறார்கள். முதுமைக்கே உரிய தள்ளாமை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள இவர்கள் ஆதரவற்றோராக சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். நிற்க முடியாமல், உட்கார முடியாமல் மழை, வெயில், குளிர் என பல்வேறு சீதோசன நிலைகளிலும்  சாலையோரங்களில் படுத்துக் கிடக்கின்றனர்.

சந்தா 2

இவர்களுக்கு ஏற்படும் வலியும் வேதனையும் கொடுமையானது. இவ்வாறு அவதிப்படும் முதியவர்களை கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம்.  இந்நிலையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை, வினைசெய் அறக்கட்டளை இணைந்து திருச்சி மாநகராட்சி உறையூர் செல்லும் வழியில் புத்தூர் பகுதியில் உள்ள பிரதான சாலையில் அறியப்படாத முதியோர்கள் ஊன்றுகோல் உதவியுடன்கடுங்குளிரில் நிராதரவாய் உள்ளவர்களை அடையாளம் கண்டு பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மறுவாழ்வு அளிக்கும் வகையில் உறவினர்களிடம் இருந்து விலகி சாலையோரம் தனித்து வாழ்ந்து வந்த நான்கு நபர்கள் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் வினைசெய் அறக்கட்டளை கார்த்திக் உள்ளிட்டோரால் மீட்டெடுக்கப்பட்டனர்.

‌சந்தா 1

மீட்டெடுத்த நான்கு நபர்கள் தமிழ் மொழியை பேசுகிறார்கள். மீட்டெடுக்கும் பொழுது அந்நபரிடம் எவ்வித ஆபரணங்களும் பொருளோ இல்லாமல் நிராதரவாய் இருந்தவரை மீட்டு திருச்சி உறையூர் காவல் நிலையம் சட்டம் ஒழுங்குப் பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அந்நபருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் அந்நபர் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளித்து பராமரிக்க திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள கங்காரு கருணை இல்ல நிறுவனர் ராஜாவிடம் உறையூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் முரளி கரூர் வடசேரி கிராமத்தைச் சேர்ந்த ஆண்டியப்பன் வயது 76, பெட்டவாய்த்தலை திருச்சூரை சேர்ந்த அஜித் குமார் வயது 41, திருச்சி அல்லித்துறையைச் சேர்ந்த சக்திவேல் வயது 44, திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த சேகர் வயது 45 உள்ளிட்டோரை ஒப்படைத்தார்.

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், வினை செய் அறக்கட்டளை நிறுவனர் கார்த்திக், முஹம்மது இப்ராஹிம்,ரசூல், பாலகிருஷ்ணன், ஷேக் தாவூத் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் காவலர்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.