பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து வசதி

0
full

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து வசதி

ukr

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ( கும்பகோணம் ) லிட் , கும்பகோணம் , பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமமும் இன்றி , இடையூறும் இன்றி , பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம் , தஞ்சாவூர் , பட்டுக்கோட்டை பேராவூரணி , மன்னார்குடி , நன்னிலம் , நாகப்பட்டினம் , காரைக்கால் வேளாங்கண்ணி , மயிலாடுதுறை , திருவாரூர் , திருத்துறைப்பூண்டி , வேதாரண்யம் , திருச்சி , அரியலூர் , ஜெயங்கொண்டம் , கரூர் , புதுக்கோட்டை , காரைக்குடி , ராமநாதபுரம் , மதுரை ஆகிய இடங்களுக்கு 11.01.2021 முதல் 13.012021 ஆகிய நாட்களிலும் மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர் , கும்பகோணம் , திருவாரூர் , நாகப்பட்டினம் , புதுக்கோட்டை , மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை , கோயம்புத்தூர் , திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி , தஞ்சாவூர் , புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் 11.012021 முதல் 13.01.2021 வரையும் , அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ற வகையில் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 11.01.2021 முதல் 13.01.2021 வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் , தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது . கும்பகோணம் , தஞ்சாவூர் , பட்டுக்கோட்டை , பேராவூரணி மன்னார்குடி , நன்னிலம் , திருவையாறு தட பேருந்துகள் , தாம்பரம் சானிடோரியம் ( MEPZ ) அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும், கரூர் , திருச்சி , அரியலூர் , செந்துறை , ஜெயங்கொண்டம் , புதுக்கோட்டை அறந்தாங்கி , ராமநாதபுரம் , ராமேஸ்வரம் , பரமக்குடி , மதுரை , கமுதி , முதுகுளத்தூர் , நாகப்பட்டிணம் , வேளாங்கண்ணி , மயிலாடுதுறை , சீர்காழி , திருவாரூர் , திருத்துறைப்பூண்டி , வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது . பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 15.012021 முதல் 18.01.2021 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கும்பகோணம் கோட்ட அரசு போக்குவத்துக்கழகம் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

half 1

Leave A Reply

Your email address will not be published.