திருச்சியில் பணம் தராத பட்டறை உரிமையாளருக்கு கத்தி குத்து:

திருச்சியில் பணம் தராத பட்டறை உரிமையாளருக்கு கத்தி குத்து:

திருச்சி, அரியமங்கலம் விறகுக் கடையைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர்(32), வெங்கடேசன் (29), ஆகியோர் சாகுல் ஹமீதிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5000 பணம் கேட்டுள்ளனர். சாகுல் பணம் தர மறுத்ததால் அங்குள்ள ஆட்டோ கண்ணாடியை அடித்து உடைத்துள்ளர். தடுக்க வந்த சாகுலை கத்தியால் குத்தினர்.
இதில் படுகாயமடைந்த சாகுல் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். இதுகுறித்து, சாகுல் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்தனர். மேலும், தலைமறைவாகிய தஸ்தகீரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், இவர்கள் இருவர் மீதும் பல்வேறு காவல்நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது தெரியவந்தது.
