இலக்கியத் தாகம் மாத இதழ் வெளியீட்டு விழா

0

இலக்கியத் தாகம் மாத இதழ் வெளியீட்டு விழா

சந்தா 2

இலக்கியத் தாகம் அரசியல் ஆன்மிகம் இலக்கிய மாத இதழ் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது . மயிலாடுதுறை தேன் அமுத தமிழ் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் லதா சந்துரு தலைமை வகித்தார். திரைப்பட இயக்குனர் ராசி அழகப்பன் இலக்கிய தாகம் மாத‌ இதழை வெளியிட யுகா அமைப்பு தலைவர் அல்லிராணி, நெல்லை அமமுக மாநகர் மாவட்ட பொருளாளர் ஜோதி ராஜ், அன்பால் அரவணைப்போம் அறக்கட்டளை நிறுவனர் ஆயிஷா, அன்பு அறக்கட்டளை நிறுவனர் சதீஷ்குமார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உமா சங்கரி, அனைத்துலக பிள்ளைமார் சங்க தலைவர் சக்திவேல், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் இதழினை பெற்றுக் கொண்டார்கள்.

பேராசிரியர்கள் செல்வி, ரஞ்சனி, கலையரசி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இலக்கியத் தாகம் இதழ் செய்தி ஆசிரியர் கவி பெரியசாமி ஏற்புரையாற்றினார். இலக்கிய தாக மாத இதழ் நிர்வாக இயக்குனர் சிவன் கார்த்திக், மேற்பார்வையாளர் செந்தில்குமார், பொறுப்பாசிரியர் ஜெயபாலன், புரவலர்கள் அல்லிராணி, இந்திரா சுந்தரம், பாஸ்கரன், சட்ட ஆலோசகர் மூர்த்தி, உமாமகேஸ்வரி, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலமுருகன், இந்திரா நாராயணசாமி, செய்தியாளர்கள் அனந்தகிருஷ்ணன், அப்துல் அலி ஹஸன், மாரியப்பன், கனகராஜ், கணேசன், புகைப்பட கலைஞர்கள் கேசவன், பார்த்திபன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.