திருச்சியில் சமுதாய நூலகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்:

0
1 full

திருச்சியில் சமுதாய நூலகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்:

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சமுதாய நூலகம் என்ற புதிய திட்டத்தை சமீபத்தில்
அறிமுகப்படுத்தியது. தமிழ்நாட்டில் முதன் முதலாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட தென்னூர் பட்டாபிராமன் தெருவில் அமைந்துள்ள ரோகிணி கார்டன் என்கிளேவ் “சி” பிளாக்-ல் “சமுதாய நூலகம்”  இன்று (9.01.2021) திறக்கப்பட்டது.

சமுதாய நூலகம் அமைக்க குடியிருப்போர் ரூபாய் 20,000/- வைப்புத்தொகையாக மாவட்ட
நூலக ஆணைக்குழுவிற்கு செலுத்த வேண்டும். நூலகம் செயல்பட அறை மற்றும் தளவாடங்கள் வழங்கப்பட வேண்டும் நூலகத்தை குடியிருப்போர் தனது சொந்த பொறுப்பிலேயே நடத்த வேண்டும். இந்நிபந்தனைகளுக்குட்பட்டு சமுதாய நூலகம் அமைக்க முன்வந்த ரோகினி கார்டன் என்கிளேவ் “சி” பிளாக் குடியிருப்போர்களை பாராட்டியும், நூலகத்தை திறந்து வைத்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு சிறப்புரையாற்றினார்.

2 full

அவர் தனது சிறப்புரையில் தமிழ்நாட்டில் முதன்முதலாக இத்தகைய சமுதாய நூலகத்தை அமைக்க வாசிப்பு பழக்கத்தின் முக்கியத்துவத்தினை அறிந்து குடியிருப்போர் முன்வந்து பொது நூலக துறையுடன் ஒத்துழைத்து அரசு நிபந்தனைகளை நிவர்த்தி செய்து குடியிருப்போர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டு வருகின்றனர். வாசிப்பதன் மூலம் நம் தாய் மொழியை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும். தாய் மொழியில் சிறந்த புலமையிருந்தால் மட்டுமே நம்முடைய அறிவு வளர்ச்சியடையும். ஆங்கிலம் போன்ற பிற மொழிகளை கற்றுக்கொள்ள அவசியம் ஏற்பட்டாலும், தாய்மொழியில் நாம் நன்கு புலமை பெற்றிருக்க வேண்டும். ]

நூல்களை வாசிப்பதன் மூலம் அறிஞர்கள், சான்றோர்கள், வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் பலரும் பல ஆண்டுகளாக அனுபவித்து அறிந்ததை நாம் சிலமணிகளில் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. இதன் மூலம் நாம் எளிமையாகவும், எளிமையாக இருப்பதன் மூலம் நேர்மையாகவும் வாழ முடியும். நூல்களை வாசிப்பது ஒர் வாழ்க்கை பாடமாக இருக்கிறது. ஒருவன் கல்வி கற்று செல்வந்தராக வாழ்ந்தாலும் அவன் பெற்ற செல்வத்தை நல்ல முறையில் சமுதாயத்திற்காகவும், நல்ல நோக்கத்திற்காகவும் செலவழிக்க நல்ல அறிவையும் புரிதலையும் வாசிப்பு மட்டுமே அளிக்கிறது என்றும் இந்த சமுதாய நூலகத்தை அடுக்குமாடியில் குடியிருப்போர் குறிப்பாக குழந்தைகள் பெண்கள் குடும்ப தலைவிகள் நன்கு பயன்படுத்தி நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் விருப்ப
நிதியிலிருந்து ரோகிணி கார்டன் என்கிளேவ் சி பிளாக் சமுதாய நூலக வளர்ச்சிக்க ரூ.20000/-
நிதி வழங்க உள்ளதாக விழாவில் அறிவித்தார். குழந்தைகளுக்கும், குடியிருப்போர்களுக்கும் நூலக உறுப்பினர் அட்டையும் நூல்களையும் வழங்கினார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.